நீங்கள் விமர்சித்தது தவறு! – நீதிபதிக்கு எதிராக நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யும் விஜய்

விஜய் 2012ம் ஆண்டு இங்கிலாந்திலிருந்து ரோல்ஸ் ராய்ஸ் காரை வாங்கினார் செய்தார். இந்த காருக்கு செலுத்தும் நுழைவு வரி தொடர்பாக விஜய் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். அவரின் மனுவை தள்ளுபடி செய்ததுடன் ரூ.1 லட்சம் அபாரதமும் விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார். அந்த அபாரத தொகையை முதல்வர் கொரோனா நிவாரண நிதிக்கு அளிக்க வேண்டும் எனவும் நீதிபதி உத்தரவிட்டார்.

அதோடு, திரைப்படங்களில் சமூக நீதிக்கு பாடுபடுவது போல் நடிக்கும் நடிகர்கள் வரி ஏய்ப்பு செய்வதை ஏற்க முடியாது. நடிகர்கள் உண்மையான ஹீரோவாக இருக்க வேண்டும். ரீல் ஹீரோவாக இருக்க கூடாது எனவும் நீதிபதி அறிவுரையும் செய்தார். இதையடுத்து, விஜயை பலரும் கடுமையாக விமர்சனம் செய்தனர். ஆனால், சிலர் விஜய்க்கு ஆதரவாக கருத்து தெரிவித்தனர். நாம் தமிழர் சீமானும் விஜய்க்கு ஆதரவாக அறிக்கை வெளியிட்டார்.

இந்நிலையில், இந்த விவகார்த்தில் மேல்முறையீடு செய்வது என விஜய் முடிவெடுதுள்ளர. இதுபற்றி கருத்து தெரிவித்த விஜயின் வழக்கறிஞர் குமரேசன் ‘இறக்குமதி உட்பட சில வரிகளை விஜய் செலுத்திவிட்டார். ஆனால், நுழைவுவரி தொடரபாக கேரள நீதிமன்றம் மற்றும் சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை பின்பற்றியே விஜய் நுழைவு வரி கட்டவில்லை. நீதிமன்ற உத்தரவிற்கும், அரசின் அணுகுமுறைக்கும் இருந்த முரண்பாடுகளால்தான் இந்த வழக்கு இத்தனை வருடங்கள் நடந்து வந்தது. ஆனால், அரசு தரப்பு உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கின் தீர்ப்பில் நுழைவு வரி கட்ட வேண்டும் என 2017ம் ஆண்டு தீர்ப்பு வெளியானது. எனவே, அந்த வழக்குகள் ஒவ்வொன்றாக தற்போது முடிக்கப்பட்டு வருகிறது. அதில் ஒன்றுதான் விஜயின் வழக்கு.  

ஆனால், நீதிபதியோ விஜய் வழக்கு தொடர்ந்ததே தவறு என்கிற ரீதியில் கருத்து தெரிவித்துள்ளார். உண்மை புரியாமல் ஊடகங்களும் விஜய் தவறாக விமர்சித்து வருகிறது. இப்போதும் மேல் முறையீடு என்பது வரியையோ, அபாரதத்தையோ செலுத்த மாட்டோம் என்பதற்காக இல்லை. நீதிபதி தெரிவித்த ஆட்சேபகராமன கருத்துக்களை எதிர்த்துதான். தனி நபரை விமர்சிப்பதுப்போன்ற கருத்தை அவர் தெரிவித்திருக்க கூடாது என்பதுதான் எங்கள் வாதம். அதை சட்டப்படி எதிர்கொள்வோம்’ என தெரிவித்துள்ளார்.
 

Published by
adminram