தீவிரவாதிகளுடன் மோதும் விஜய்... பீஸ்ஸ் பட முக்கிய அப்டேட்!

by adminram |

f414778813e54faad06a4e7f1f18b95d

நெல்சன் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் திரைப்படம் பீஸ்ட். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்து வருகிறார். மேலும், யோகிபாபு, விடிவி கணேஷ் உள்ளிட்ட பலரும் நடிக்கவுள்ளனர்.

இப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு ஜார்ஜியா நாட்டில் நடைபெற்றது. அதன்பின் 2ம் கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடந்தது. இதில், விஜய் - பூஜா ஹெக்டே இடையேயான பாடல் காட்சி படம்பிடிக்கப்பட்டது. அடுத்த கட்டப்படப்பிடிப்பு ரஷ்யாவில் நடைபெறவதாக கூறப்பட்டது. ஆனால், அது தற்போது மாற்றப்பட்டு சென்னையில் 20 நாட்கள் படப்பிடிப்பு நடக்கவுள்ளது. இதில் பரபர ஆக்‌ஷன் காட்சிகள் படமாக்கப்படவுள்ளது. 2022 கோடை விடுமுறையில் இப்படத்தை வெளியிட வேண்டும் என படக்குழு வேகமாக இயங்கி வருகிறது.

3d52124bf2767207599273e32e7f22c7

இப்படத்தில் 3 வில்லன்களுடன் விஜய் மோதவுள்ளாராம். அதில் ஒருவர் மலையாள நடிகர் சைன் டாம் சாக்கோ. இவர் மலையாளத்தில் மிரட்டலான கதாபத்திரங்களில் நடித்தவர். அடுத்து, ‘சார்பட்டா பரம்பரை’ திரைப்படத்தில் டான்சிங் ரோஸாக வந்து ரசிகர்களை கவர்ந்த ஷபீர் கல்லாரக்கல், அடுத்து நமக்கு மிகவும் தெரிந்த தமிழ் பட இயக்குனர் செல்வராகவன். இவர்கள் மூவருடன்தான் விஜய் மோதவுள்ளார்.

7e07f38b0dc4c7229ab8b34d7f3af13f

இந்நிலையில், தீவிரவாதிகளின் நாச வேலைகளை முறியடிக்கும் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறாரம். சென்னையில் தற்போது நடக்கவுள்ள படப்பிடிப்பில் ஒரு மாலில் தீவிரவாதிகளுடன் அவர் மோதுவது போன்ற காட்சிகள்தான் எடுக்கப்படவுள்ளது. அடுத்து படக்குழு ரஷ்யா செல்லவுள்ளது. எனவே, பல நாடுகளுக்கும் சென்று அவர் தீவிரவாதிகளுடன் மோதுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Next Story