சின்ன கலைவாணர் என அழைக்கப்படும் நடிகர் விவேக் திடீரென ஏற்பட்ட மாரடைப்பால் சமீபத்தில் மரணமடைந்தார். அவரின் மரணம் திரையுலகினர் மட்டுமின்றி ரசிகர்களுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அவரின் மறைவுக்கு திரையுலகினர் பலரும் இரங்கல் தெரிவித்தனர். சமூகவலைத்தளங்கள் மூலமாகவோ, அறிக்கை மூலமாகவே நடிகர்,நடிகைகள் தங்கள் சோகத்தையும், அதிர்ச்சியையும் வெளிப்படுத்தினர்.
ஆனால், விவேக்குடன் பல திரைப்படங்களில் நடித்த நடிகர் விஜய் மற்றும் அஜித் இருவரும் விவேக் மரணம் பற்றி எந்த ரியாக்ஷனும் காட்டவில்லை. விஜய் தனது புதிய படத்தின் படப்பிடிப்பிற்காக ஜார்ஜியாவில் இருந்தார். அவருக்கு தகவல் தாமதமாக கூட கிடைத்திருக்கலாம். குறைந்தபட்சம் தனது டிவிட்டரில் ஒரு டிவிட் செய்திருக்கலாம். ஆனால், விஜய் அதை செய்யவில்லை என பலரும் கருத்து தெரிவித்து வந்தனர்.
இந்நிலையில், விஜய் நேற்று ஜார்ஜியாவில் இருந்து சென்னை திரும்பினார். மேலும், இன்று காலை விவேக்கின் வீட்டிற்கு நேரில் சென்று ஆறுதல் கூறியுள்ளார். எனவே, நீண்ட நாள் சர்ச்சைக்கு விஜய் முற்றுப்புள்ளி வைத்துள்ளார். ஆனால், புதிய சர்ச்சையில் சிக்கியுள்ளார்.
வெளிநாட்டிலிருந்து வரும் ஒருவர் தன்னை சில நாட்கள் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும். ஆனால், விஜய் அதை செய்யாமல் விவேக்கின் வீட்டிற்கு நேரில் சென்றது புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு விஜய் விளக்கமளிப்பாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்..
தமிழ் சினிமாவில்…
Venkat Prabhu:…
சினிமாத்துறையில் எப்போதும்…
Ilaiyaraja Manirathnam:…
ThugLife: கமல்ஹாசன்…