'அந்தகன்' பட தீம் மியூசிக்... நட்புக்காக விஜய் செய்யும் உதவி!... அந்தப் பாட்டுல இவ்வளவு ஸ்பெஷல் இருக்கா?...

by ராம் சுதன் |

தமிழ் சினிமாவில் 80'ஸ் காலகட்டத்தின் சாக்லேட் பாயாக பல பெண்களின் கனவு கண்ணனாக இருந்தவர் பிரசாந்த். ஏகப்பட்ட ஹிட்டு படங்களை கொடுத்த இவர் சமீப காலமாக சினிமாவில் இருந்து ஒதுங்கி இருந்தார். பின்னர் மீண்டும் திரைத்துறையில் நடிக்க தொடங்கி இருக்கின்றார்.

ஏற்கனவே வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி இருக்கும் கோட் திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றார். இந்த திரைப்படம் வருகிற செப்டம்பர் 5ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இதற்கிடையில் கடந்த 2021 முதல் 2022 காலகட்டத்தில் பிரசாந்த் நடிப்பில் எடுத்து முடிக்கப்பட்ட திரைப்படம் தான் அந்தகன்.

இந்த திரைப்படம் ஒரு சில காரணத்தினால் வெளியிடாமல் இருந்து வந்தது. இந்த திரைப்படத்தை பிரபல நடிகரும் இயக்குனருமான தியாகராஜன் இயக்கி இருக்கின்றார். இப்படம் கிட்டத்தட்ட ஐந்து வருடங்களாக கிடப்பில் போடப்பட்டிருந்தது. இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்புதான் இந்த திரைப்படம் வருகிற ஆகஸ்ட் 15ஆம் தேதி சுதந்திர தின கொண்டாட்டமாக வெளியாக உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது.

அதே தினத்தில் தான் நடிகர் விக்ரம் நடிப்பில் உருவாகி இருக்கும் தங்கலான் திரைப்படமும் வெளியாக உள்ளது. இந்த இரண்டு திரைப்படங்களின் கதையும் அழுத்தமாக உள்ள நிலையில் இப்படங்கள் இரண்டுமே நல்ல வரவேற்பை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. நீண்ட நாட்களாக தள்ளிப் போய்க் கொண்டிருந்த அந்தகன் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி அதிகாரப்பூர்வமாக வெளியாகி இருக்கின்றது.

மேலும் இந்த திரைப்படத்தின் தீம் பாடலை வரும் 24ஆம் தேதி வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டு இருக்கிறார்கள். இதனை நடிகர் விஜய் வெளியிட உள்ளார். இது தொடர்பான அறிவிப்பை போஸ்டருடன் வெளியிட்டு இருக்கின்றார் நடிகர் பிரசாந்த். இந்த பாடல் சந்தோஷ் நாராயணன் இசையில் உருவாகியுள்ளது. மேலும் இந்த பாடலை இசையமைப்பாளர் அனிருத் மற்றும் நடிகர் விஜய் சேதுபதி பாடியிருக்கின்றார்.

இது இப்பாடலின் மற்றொரு சிறப்பாக பார்க்கப்படுகின்றது. இந்நிலையில் நடிகர் பிரசாந்த் தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் நடிகர் விஜய், பிரபுதேவா, தந்தை தியாகராஜன் ஆகியோருடன் இருக்கும் புகைப்படத்துடன் இந்த அறிவிப்பை வெளியிட்டு இருக்கின்றார். நடிகர் விஜய் பிரசாந்த் உடன் இருந்த நட்பு காரணமாக இந்த விஷயத்தை செய்திருப்பதாக தமிழ் சினிமா வட்டாரங்களில் கூறப்படுகின்றது.

Next Story