ரஜினி பட இயக்குனரையே கதற விடும் விஜய்....அவர் மனசுல என்னவோ!.....

by adminram |

cc66e30229887f000712412708cdc9a7

தமிழ் சினிமாவில் பிரபு, சத்தியராஜ், ரஜினி ஆகியோரை வைத்து பல வெற்றிப்படங்களை கொடுத்தவர் பி.வாசு. ரஜினியை வைத்து அவர் இயக்கிய பணக்காரன், உழைப்பாளி, மன்னன், சந்திரமுகி ஆகிய திரைப்படங்கள் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்ற திரைப்படங்களாகும். அதிலும், சந்திரமுகியின் வெற்றி தமிழ் சினிமாவையே திரும்பி பார்க்க வைத்தது. படம் வெளியாகி 50 நாட்கள் கழித்தும் தியேட்டர்கள் ஹவுஸ்புல்லாக ஓடியது அப்படம் மட்டுமே.

88d04084757daedafd9ef2e1f6d3efac

பி.வாசுக்கு என்னவோ விஜயை வைத்து ஒரு படத்தை இயக்க வேண்டும் என்கிற ஆசை பல வருடங்களாகவுள்ளது. தற்போது முன்னணியில் இருக்கும் அவரை வைத்து இயக்கும்போது சினிமா லைம் லைட்டில் மீண்டும் தான் வந்துவிடுவோம் என நம்பிய வாசு விஜயை ஹீரோவாக வைத்து படம் இயக்கும் முயற்சியில் ஈடுபட்டார். ஏற்கனவே, சில வருடங்களுக்கு முன்பு ஒரு முறை விஜயை சந்தித்து பி.வாசு கதை கூறினார். கதையை பொறுமையாக கேட்ட விஜய், ஒரு மழுப்பலான பதிலை கூறி அனுப்பிவிட்டார்.

0abdf3fbd11e0d14128f012ff72a47f8-2

தற்போது மீண்டும் விஜயை சந்தித்து கதை கூற ஆசைப்பட்ட பி.வாசு சன் பிக்சர்ஸ் உதவியுடன் மீண்டும் விஜயை சந்தித்து ஒரு கதையை கூறியுள்ளார். வழக்கம்போல் முழுக்கதையையும் பொறுமையாக கேட்ட விஜய் ‘கதை நன்றாக இருக்கிறது சார்.. கண்டிப்பா மறுபடி சந்திப்போம்’ எனக்கூறிவிட்டு நழுவிவிட்டாராம்.

விஜய் தற்போது இளம் இயக்குனர்களின் படங்களில் நடித்து வருகிறார். அவருக்கு பி.வாசு சீனியர் இயக்குனராக தெரிகிறார். அதுசரி, விஜயை வைத்து படம் இயக்க ஆசைப்பட்ட சுந்தர் சி-க்கே விஜய் சம்மதம் தெரிவிக்கவில்லை. பி.வாசு எம்மாத்திரம்.

Next Story