தாய், தந்தை உட்பட 11 பேர் மீது நடிகர் விஜய் வழக்கு!

X
திருநெல்வேலி, தென்காசி, காஞ்சிபுரம் உள்ளிட்ட 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல், அக்டோபர் 6 மற்றும் 9ஆம் தேதிகளில் நடைபெறவுள்ள நிலையில் இந்த தேர்தலில் விஜய் மக்கள் மன்ற நிர்வாகிகள் விரும்பினால் தனிப்பட்ட முறையில் அவர்களின் சொந்த விருப்பத்தின் பேரில் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடலாம் என விஜய்யின் நேர்முக உதவியாளர் புஸ்லி ஆனந்த் தெரிவித்திருந்தார்.
ஆனால், நடிகர் விஜய் இது சம்மந்தமாக அதிகார பூர்வமாக எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை. இந்நிலையில் இது குறித்து தந்தை மற்றும் தாய் உட்பட 11 நபர்கள் மீது சென்னை சிவில் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ள விஜய் தனது பெயரையோ, தனது ரசிகர் மன்றத்தின் பெயரையோ பயன்படுத்துவதை தடை செய்யவேண்டும் என கூறியுள்ளார். இந்த வழக்கு விசாரணைக்கு இம்மாத இறுதியில் வரவுள்ளது குறிப்பிடத்தக்கது.
Next Story