ரஜினியை ‘வாடா போடா’ என அழைக்கும் ஒரே நடிகர்…யார் தெரியுமா?….

Published on: July 13, 2021
---Advertisement---

6f8e87eb1b0da671ed87b4ecf1caf326

நடிகர் ரஜினிகாந்த பற்றி அறிமுகம் தேவையில்லை… 1975ம் ஆண்டு வெளியான அபூர்வ ராகங்கள் திரைப்படம் மூலம் அறிமுகமானவர். அதன்பின் கமலுடன் 2வது ஹீரோவாக நடித்தார். கொஞ்சம் கொஞ்சமாக தனது மார்கெட்டை உயர்த்தி சூப்பர்ஸ்டார் பட்டம் பெற்றார். அவரின் திரைப்பயணத்தில் சரிவு என்பதே இல்லை. தொட்டதெல்லாம் வெற்றிதான். 

e04e4a53910dd6dc281033acc037b937

ஆனால், அவரை தமிழ் சினிமாவில் அதுவும் படப்பிடிப்பு தளத்திலேயே ‘வாடா போடா’ என அழைக்கும் நடிகர் ஒருவர் இருக்கிறார் என்றால் நம்புவீர்களா?.. இத்தனைக்கும் அவர் ஹீரோ நடிகர் இல்லை.. காமெடி நடிகர் என்றால் நம்புவீர்களா?…

dd13e936c882387b4f7719f4d94aa0f9

அவர் வேறு யாருமல்ல. ரசிகர்களை தன் காமெடியால் கட்டிப்போட்ட நடிகர் கவுண்டமணிதான் அந்த நடிகர்.. படப்பிடிப்பு தளத்தில் ரஜினியை வாடா போடா என்றுதான் அழைப்பாராம்.  ஒருமுறை பி.வாசு இயக்கத்தில் ரஜினியும், கவுண்டமணியும் நடித்த ஒரு படத்தின் படப்பிடிப்பில் ரஜினியை கவுண்டமணி வாடா போடா என அழைக்க, அப்படத்தின் இயக்குனர் பி.வாசு கவுண்டமணியிடம் ‘ரஜினியை போய் வாடா போடா’ என அழைக்கிறீர்களே என அதிருப்தி அடைந்துள்ளார். அதற்கு ‘அவன் என்னை விட வயதில் சிறியவன். நான் சீனியர்.. அப்படி அழைப்பதில் என்ன தவறு’ என அவர் கேட்க, ரஜினி ஓடி வந்து ‘அவர் சீனியர். வயதில் பெரியவர்.. அப்படி அழைப்பதில் தவறு இல்லை’ எனக்கூறி வாசுவை சமாதானம் செய்தாராம்.

4a51cc1d8c4f8b1395404007d38c732f

இந்த தகவலை பத்திரிக்கையாளரும், நடிகருமான பயில்வான் ரங்கநாதன் ஒரு யுடியூப் சேனலில் தெரிவித்துள்ளார். கவுண்டமணியுடன் பல திரைப்படங்களில் நகைச்சுவை காட்சிகளில் நடித்தவர். அதேபோல், ரஜினியுடன் பல படங்களில் காமெடி செய்தவர் கவுண்டமணி என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment