1. Home
  2. Latest News

கார் விபத்து உண்மையா?.. நடந்தது என்ன?... நடிகர் யோகி பாபு விளக்கம்


Yogibabu: கோல்வுட்டின் முன்னணி காமெடி நடிகராக வலம்வருபவர் யோகி பாபு, காமெடி வேடங்களில் மட்டுமில்லாமல் கதையின் நாயகனாகவும் நடித்து வருகிறார். தொடர்ந்து ஏராளமான படங்களில் நடித்து வருபவர் நிற்க கூட நேரமில்லாமல் பிஸியாக ஓடிக்கொண்டிருக்கிறார்.

இந்த நிலையில், யோகி பாபு சென்ற கார் விபத்துக்குள்ளாகி அவர் பலத்த காயமடைந்ததாகவும், அவருடன் சென்ற உதவியாளருக்கும் பலத்த காயம் ஏற்பட்டிருப்பதாகவும், இன்று காலை சமூக வலைதளங்களில் தகவல் வெளியாகி வைரலானது. மேலும், சில இணையதளம் மற்றும் சோசியல் மீடியாக்களில் இந்த தகவலை சிலர் பகிர்ந்து வருகிறார்கள்.

இந்த சம்பவம் குறித்து விளக்கம் அளித்துள்ள யோகி பாபு, “எனக்கு எந்தவித விபத்தும் ஏற்படவில்லை, நான் நலமாக இருக்கிறேன். தற்போது ஒரு படத்தின் படப்பிடிப்பில் பிஸியாக இருக்கிறேன். அந்த படப்பிடிப்புக்காக வந்திருந்த ஒரு கார் விபத்தில் சிக்கியது. அந்த காரில் நானும், என் உதவியாளரும் பயணிக்கவில்லை. ஆனால், நானும், என் உதவியாளரும் அந்த காரில் சென்று விபத்தில் சிக்கி காயமடைந்ததாக தவறான தகவல்கள் பரவி வருகிறது. அது முற்றிலும் தவறு, என்பதை நான் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த விசயம் அறிந்து என் நண்பர்கள், திரை பிரமுகர்கள், ரசிகர்கள், பத்திரிகையாளர்கள் என பலர் என்னை தொடர்பு கொண்டு நலம் விசாரித்து வருகிறார்கள். என் மீது அக்கறை கொண்ட அவர்கள் அனைவருக்கும் இந்த சமயத்தில் என் அன்பு கலந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.” என்று தெரிவித்துள்ளார்.

கட்டுரையாளர்கள்

CineReporters Team

CineReporters Team

Editorial Team Member

info@cinereporters.com

உங்கள் நம்பிக்கைக்குரிய பொழுதுபோக்கு செய்தி, திரைப்பட விமர்சனம் மற்றும் பிரபலங்களின் அப்டேட்ஸுக்கான தளம். சினிமா உலகின் சமீபத்திய தகவல்களை உங்களுக்காக கொண்டு வருகிறது.