செம ஸ்டைலான லுக்கில் சூர்யா... வெளியான புது பட அப்டேட்...

by adminram |

6cff297770effd5887651f2b5a4a177d

சூரரைப்போற்று திரைப்படத்திற்கு பின் பாண்டியாஜ் இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் திரைப்படம் எதற்கும் துணிந்தவன். இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. இப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக தெலுங்கு நடிகை பிரியங்கா மோகன் நடிக்கவுள்ளார். இவர் ஏற்கனவே சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ‘டாக்டர்’ படத்திலும் நடித்துள்ளார். மேலும், இப்படத்தில் சூரி, சத்தியராஜ், சரண்யா பொன்வண்ணன் என பலரும் நடித்துள்ளனர்.

9b9afcf9dae318d0920d91ae33c49a05

இந்நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது நிறைவு பெற்றுள்ளது. இதுபற்றி தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள இப்படத்தின் இயக்குனர் பாண்டிராஜ் ‘எதற்கும் துணிந்தவன் படப்பிடிப்பு 51 நாட்கள் நடைபெற்று முடிந்துள்ளது. சூரியனாலும், மழையாலும் எங்களின் வேகத்தை தடுத்து நிறுத்த முடியவில்லை.சூர்யா, சன் பிக்சர்ஸ், ஒளிப்பதிவாளர் ரத்தினவேலு உள்ளிட்ட படக்குழுவினருக்கு நன்றி’ என தெரிவித்துள்ளார்.

ce87cdce2eda99b1074ff5dc9f3d4167

மேலும், இப்படம் தொடர்பான சூர்யாவின் புதிய லுக் புகைப்படமும் தற்போது வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த புகைப்படத்தை சூர்யா ரசிகர்கள் சமூகவலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

Next Story