சர்ச்சைகளுக்கு பஞ்சமில்லாத நடிகர் சங்க தேர்தல்… தீர்ப்பு சொன்ன நீதிமன்றம்!

தென்னிந்திய நடிகர் சங்க தேர்தலில் விஷால் தலைமையில் ஒரு அணியும் மற்றும் தயாரிப்பாளர் ஐசரி கே கணேஷ் தலைமையில் ஓர் அணியும் போட்டியிட்டு பெரும் பிரச்சணையாக  நீதிமன்றம் வரை சென்றனர். என்னப்பா நடிகர் சங்க தேர்தலுக்கு இத்தனை கலோபரமா என அனைவரும் கேட்கும் அளவிற்கு நடந்துக் கொண்டனர். 

அனைத்து மீடியாக்களிலும் இவர்களை பற்றிய பேச்சுதான் போய்க்கொண்டிருந்தது. எப்போதும் சுவாரசியத்திற்கு துளியும் பஞ்சம் இல்லாமல் இருப்பது சினிமா துறை மட்டும் தான். அந்த வகையில் இந்த நடிகர் சங்க தேர்தலும் அதை விட்டு வைக்கவில்லை.

இதனால் ஏற்கனவே நடந்த தேர்தலை ரத்து செய்து மீண்டும் ஒரு புதிய தேர்தலை நடத்த கோர்ட்டு உத்தரவிட்டிருந்தது. அதுவம் 3 மாதத்திற்குள் நடக்க வேண்டும் என்று கூறியிருந்தது.

இந்நிலையில் உயர்நீதி மன்றம் தற்போது எந்த சர்ச்சையும் இல்லாமல் நடிகர் சங்க தேர்தல் நடத்தலாம் என  உத்தரவுவிட்டுள்ளது.

Published by
adminram