வெப் தொடர்களில் களம் இறங்கும் முன்னணி ஹீரோக்கள்...அப்ப தியேட்டர் கதி?....

by adminram |

5784b92ea360276b9ec230a0a3fbae02

கடந்த ஒன்றரை வருடங்களாகவே தமிழகத்தில் திரையரங்குகள் மூடிக்கிடப்பதால் அமேசான், நெட்பிளிக்ஸ், சோனி, ஹாட் ஸ்டார் போன்ற ஓடிடி தளங்கள் தலை தூக்கியுள்ளது. தனது சூரரைப்போற்று திரைப்படத்தை அமேசான் பிரைமில் வெளியிட்டு இதை துவக்கி வைத்தவர் சூர்யா. இதற்கு திரையரங்க உரிமையாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

ஆனாலும், அதன்பின் மெல்ல மெல்ல மற்ற படங்களும் ஓடிடியில் வெளியாக துவங்கியது. ஆர்யா நடித்த டெடி, சார்பட்டா பரம்பரை ஆகிய படங்கள் ஓடிடியிலேயே வெளியாகி தயாரிப்பாளர்களுக்கு நல்ல லாபத்தை கொடுத்துள்ளது. எனவேதான், நடிகர் சூர்யா தான் தயாரித்து வரும் 4 படங்கள் அமேசான் பிரைமில் வெளியாவதாக ஏற்கனவே அறிவித்துவிட்டார்.

2321c848494e048abc5bffe972aff915

ஒருபக்கம் வெப் சீரியஸ் மற்றும் ஆந்தாலஜி திரைப்படங்கள் மிகவும் பிரபலமடைந்து வருகிறது. விஜய் சேதுபதி கூட வெப் சீரியஸில் நடிக்க துவங்கி விட்டார். தமன்னா, ஸ்ருதிஹாசன் உள்ளிட்ட முன்னணி நடிகைகள் கூட வெப்சீரியஸில் நடித்து வருகின்றனர்.

efa1ae56872458197af3fa1685b43498-2

தற்போது நடிகர் ஆர்யா அமேசான் பிரைமுக்காக ஒரு வெப் தொடரில் நடிக்கவுள்ளார். அதேபோல், நடிகர் அருண்விஜய் அறிவழகன் இயக்கத்தில் ஒரு வெப் தொடரில் நடிக்கவுள்ளார். இந்த தொடரை ஏவிஎம் - சோனி நிறுவனம் இணைந்து தயாரிக்கவுள்ளது. அதேபோல், நடிகர் அதர்வா ஒரு புதிய வெப் தொடரில் நடிக்கவிருக்கிறார். இந்த தொடரை பிரசாத் முருகேசன் என்பவர் இயக்கவுள்ளார்.

99f84bd06842b49d36f75b2069438e12

நடிகர்கள் மட்டுமில்லாமல், நடிகைகள் அமலாபால், ரெஜினி, காஜல் அகர்வால் ஆகியோரும் வெப் தொடர்களில் நடிக்க துவங்கிவிட்டனர். திரையரங்குகள் திறக்கப்பட்டாலும் வெப் தொடர்கள் இனிமேல் ரசிகர்களிடம் வரவேற்பை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Next Story