More

அடங்கமாட்டியா அமலா பால்? பயமா இருக்கு ஏதாச்சும் எடக்கு மடக்கா ஆகிடுமோன்னு!

சமூகவலைதங்களில் ஆகட்டிவாக இருந்து வரும் நடிகை அமலா பால் தற்போது கயிருக்கட்டி தலைகீழாக தொங்கி யோகாசனம் செய்த புகைப்படத்தை வெளியிட்டு பிரம்மிப்பூட்டியுள்ளார். கடந்த மூன்று நாட்களாகவே அமலா பால் தொடர்ந்து இப்படி பதறவைக்கும் யோகாசனம் செய்து வியப்பூட்டி வருவது குறிப்பிடத்தக்கது. 

Advertising
Advertising

 அந்தரத்தில் தலைகீழாக தொங்கியபடி கடினமாக யோகாசனத்தை அசால்டாக செய்து அசத்தியுள்ளார். இந்த புகைப்படத்தை இன்ஸ்டாவில் வெளியிட்டு லட்ச கணக்கில் லைக்ஸ் அள்ளியுள்ளார். மேலும், அமலா பாலின் திறமையை கண்டு பலரும் பாராட்டி தள்ளியுள்ளனர். 

கோலிவுட்டின் சர்ச்சைக்குரிய நடிகையாக இருந்து வருபவர் நடிகை அமலா பால். சிந்து சமவெளி படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு வந்த இவர் அடுத்தடுத்து முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து டாப் நடிகைகளில் ஒருவராக வலம் வருகிறார்.

இதற்கிடையில் கடந்த 2014ம் ஆண்டு இயக்குனர் ஏ.எல் விஜய்யை திருமணம் செய்துக்கொண்ட அமலா பாலின் வாழ்க்கை மூன்று வருடத்திற்குள் முடிவுக்கு வந்தது. பின்னர் முறையாக விவகாரத்து பெற்று இருவரும் தங்களது கேரியரில் கவனத்தை செலுத்தி வந்தனர். முன்னாள் கணவருக்கு திருமணம் ஆகி குழந்தை பிறந்து விட்டது ஆனால், அமலா பால் இன்னும் சிங்கிள் வாழ்க்கையை ஜாலியாக வாழ்ந்து வருகிறார். 

 

Published by
adminram

Recent Posts