
பின்னணி பாடகியாக இருந்து கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் சரத்குமார் நடித்த ‘பச்சைக்கிளி முத்துச்சரம்’ திரைப்படம் மூலம் சினிமாவில் நடிக்க துவங்கியவர் ஆண்ட்ரியா. ஆயிரத்தில் ஒருவன், விஸ்வரூபம், துப்பறிவாளன், தரமணி, மாஸ்டர் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்துள்ளார். திறமையும் அழகும் சரிபாதியாக கலந்த ஆண்ட்ரியா தனக்கு பொருத்தமான வேடங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார்.

குறிப்பாக வட சென்னை, தரமணி, ஆயிரத்தில் ஒருவன் உள்ளிட்ட படங்கள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றதுடன் திறமையான நடிகையாகவும் ஆண்ட்ரியா கருதப்பட்டார்.

இதற்கிடையில் அவ்வப்போது திரைப்படங்களில் பாடுவது, ஆல்பம் சாங் , மேடை கச்சேரி என பிஸியாக இருந்து வருகிறார். ஒருபக்கம் தனது புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

இந்நிலையில், சட்டையை கழட்டி கவர்ச்சியாக போஸ் கொடுத்து நெட்டிசன்களை சூடாக்கியுள்ளார்.






