10 தடவைக்கு மேல எனக்கு கல்யாணம் பண்ணி வச்சிட்டாங்க... யாரை சொல்கிறார் அஞ்சலி?
நடிகை அஞ்சலி கற்றது தமிழ் படத்தின் மூலமாகத் தமிழ்த்திரை உலகிற்கு அறிமுகமானார். இவருடைய காதல் பிரேக் அப் ஆனதுக்குப் பிறகு கொஞ்சம் மன உளைச்சலில் இருந்தார். இருந்தாலும் சோசியல் மீடியாவில் மட்டும் தன்னோட போட்டோக்களைப் போடுவதில் இருந்து இவர் தவறவில்லை. அதனால ரசிகர்களை எப்போதும் தக்க வைத்துக் கொண்டார். இவருடைய காதல் பிரேக் அப்புக்குப் பிறகு ஏழு கடல் ஏழு மலை என்ற படம் வந்தது. அந்தப் படம் பெரிய அளவில் ரீச் ஆகவில்லை. அதன்பிறகு கேம்சேஞ்சர் படங்களில் எல்லாம் நடித்தார்.
அங்காடித்தெரு, அரவான், கலகலப்பு, சேட்டை அது மாதிரியான பல நல்ல படங்கள் தமிழிலும் வந்தது. தெலுங்கிலும் நிறைய நல்ல படங்கள் வந்தன. நடிகை ஜெய்யும், அஞ்சலியும் 3 வருஷமா லிவிங் டுகதரில் இருந்தார்கள். அதன்பிறகு அது பிரேக் அப் ஆனதும் மன உளைச்சலில் இருந்தார். நீண்ட இடைவெளிக்குப் பின் சிங்கம் 2 படத்தில் தான் ஒரு பாடலுக்கு ரீ என்ட்ரி கொடுத்தார்.
அஞ்சலி தமிழ்சினிமாவில் ஒரு ரவுண்டு வருவார் என்று பார்த்தால் அவங்க நிலைமை ஒரு பாடலுக்கு ஆடுவது மாதிரி ஆகிவிட்டது. அதன்பிறகு சோசியல் மீடியாவில் 10 தடவையாவது கல்யாணம் பண்ணி வச்சிருப்பாங்க. நான் யாரையுமே கல்யாணம் பண்ணிக்கல. எதுவுமே உண்மை இல்லை. இது என்னோட பேமிலியையும் பாதிக்குது. அதனால இனி சினிமாவுல நடிக்கறதுல மட்டுமே கவனம் செலுத்தப் போறேன்.
எனக்குக் கல்யாணத்துக்கு இன்னும் டைம் ஆகல. எனக்கு நீங்க கல்யாணம் பண்ணி வைக்கத் தேவையில்லை என சோசியல் மீடியாவைப் பார்த்து சொல்கிறார் அஞ்சலி.அங்காடித் தெரு படத்தில் இவர் நடித்த நடிப்பு அபாரமானது. அதைப் போல முன்னணி நடிகைகள் கூட நடிக்க முடியாது. அந்த அளவுக்கு நல்ல பர்ஃபார்மன்ஸ் கொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.