செல்பி எடுக்குறோம் என உடலில் தடவுகிறார்கள் – நடிகை பகீர் புகார்

உதயநிதி ஸ்டாலின் நடித்த நிமிர் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்தவர் நமிதா பிரமோத். இவர் சமீபத்தில் அளித்த பேட்டியில் கூறியதாவது:

பொது இடங்களுக்கு செல்லும் போது பல தொல்லைகளை சந்திக்கிறேன். சிறுவர்களும், பெண்களும் என்னை சகோதரி போல் பாவித்து அன்பாக பழகுகிறார்கள். புகைப்படம் எடுத்துக்கொள்கிறார்கள். இது மகிழ்ச்சியாக இருக்கிறது. ஆனால், சிலர் ரசிகர்கள் என்கிற போர்வையில் அருகில் வந்து செல்பி எடுப்பது போல் உடலை தொடுகின்றனர். தோளில் கை வைக்கின்றனர். அது எரிச்சலாக இருக்கிறது. இதனால், மக்கள் நடமாட்டம் இருக்கும் இடங்களுக்கு செல்லும் போது பர்தா அணிந்து செல்கிறேன் எனக்கூறியுள்ளார்.

சமீபத்தில் பாலிவுட் நடிகை சாரா அலிகானிடம் செல்பி எடுக்கிறேன் எனக்கூறி ஒரு ரசிகர் அவருக்கு முத்தமிட்டது குறிப்பிடத்தக்கது.

Published by
adminram