மேலாடை கழற்ற சொன்னார் – தயாரிப்பாளர் மீது நடிகை பகீர் புகார்

சமீபகாலமாகவே, நடிகைகள் திரை உலகில் தாங்கள் சந்தித்த பாலியல் தொல்லைகள் குறித்து வெளிப்படையாக பேசி வருகின்றனர்.  பாலிவுட்டில் சன்சில்க் ரியல் எஃப் எம், தேரே லியே புரோ உள்ளிட சில படங்களில் நடித்தவர் மஹ்லார் ரத்தோட். சினிமாவில் வாய்ப்பு கிடைக்காததால் தற்போது தொலைக்காட்சி சீரியல்களில் நடித்து வருகிறார்.

இவர் சமீபத்தில் அளித்த பேட்டியில் ‘சினிமாவில் பெரிய நடிகை ஆகவேண்டும் என்கிற கனவில் 2008ம் ஆண்டு மும்பை வந்தேன். அப்போது நான் டீன் ஏஜ் வயதில் இருந்தேன். சினிமா வாய்ப்பு கேட்டு ஒரு தயாரிப்பாளரை சந்தித்தேன். அவருக்கு 65 வயது இருக்கும்.   நான் உன்னில் ஒருவனாக இருக்கிறேன் எனக் கூறினார். அவர் கூறியது எனக்குப்புரியவில்லை. அதன்பின், உன் மேலாடையை கழற்று என்றார். நான் பயந்துவிட்டேன். வாய்ப்பே வேண்டாம் என அங்கிருந்து ஓடி வந்து விட்டேன்’ என அவர் கூறியுள்ளார்.ஆனால், யார் அந்த தயாரிப்பாளர் என அவர் கூற மறுத்துவிட்டார்.

Published by
adminram