முன்பே வா என் அன்பே... 42 வயதில் இளம் ஹீரோயின்களை தூக்கி சாப்பிட்ட பூமிகா!

by adminram |

191335d587aecd1cea3e46dcb1edd8e2
20 ஆண்டுகளுக்கு முன்பு ‘ரோஜா கூட்டம்’ திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை பூமிகா. அதன்பின் மளமளவென படங்களில் நடித்தார். விஜய்யுடன் பத்ரி படத்தில் நடித்திருந்தார். அதன்பின் நீண்ட இடைவெளி விட்டு ‘சில்லுன்னு ஒரு காதல்’ படத்தில் நடித்தார்.

அந்த படம் அவரது ஒட்டுமொத்த திரைப்பயணத்தையே வலுவாக்கியது. ஐபடத்தில் ஐஷு கதாபாத்திரத்தில் நடித்து அனைவரின் மனதிலும் கனவு கன்னியாக வளம் வந்தவர் பூமிகா. அதன்பின் திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆனார்.

திருமணத்திற்கு பிறது தமிழில் சரியான வாய்ப்பு கிடைக்காததால் தெலுங்கு மற்றும் பாலிவுட் பக்கம் திரும்பினார். பாலிவுட்டில் தோனியின் வாழ்க்கை திரைப்படத்தின் மூலம் அறிமுகமான இவர் தொடர்ந்து பல படங்களில் நடித்து வருகிறார்.மேலும், தமிழில் யூடர்ன் படத்திலும் நடித்திருந்தார்.

இந்நிலையில் தற்ப்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அழகிய புகைப்படங்களை வெளியிட்டு அவருக்கு 42 வயது என்பதை அவரே அடிச்சு சொன்னாலும் நம்பமுடியாத அளவிற்கு அம்சமான போஸ் கொடுத்து இளம் ஹீரோயின்களை ஓரங்கட்டி வருகிறார்.

Next Story