
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ‘பாரதி கண்ணம்மா’ சீரியல் பலராலும் ரசித்து பார்க்கப்படுகிறது. அதனால் இதன் டி.ஆர்.பி.எக்குதப்பாக எகிறி வருகிறது.

இந்த சீரியலில் வில்லி வேடத்தில் நடித்து வருபவர் ஃபரினா அசாத். அந்த சீரியலின் கதாநாயகியை விட அவர் மிகவும் அழகாக காட்டப்பட்டு வந்தார். மேலும்,நடிப்பிலும் இவர் அசத்தி வந்தார். ஒருபக்கம் சமூக வலைத்தளங்களில் ஒன்றான இன்ஸ்டாகிராமில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் அவர் தொடர்ந்து தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவிட்டு வந்தார்.

திடீரென அந்த சீரியலில் அவருக்கு பதில் வேறு நடிகை காட்டப்பட்டார். ஒருவேளை அந்த சீரியலில் இருந்து நீ விலகிவிட்டாரோ என ரசிகர்கள் கருதினர். தற்போது அதற்கான காரணம் தெரியவந்துள்ளது.

அவர் கர்ப்பமானதால்தான் அந்த சீரியல் நடிப்பதை நிறுத்தியுள்ளார். தற்போது அவருக்கு 7 மாதம் ஆகிறது. இன்னும் 3 மாதங்களில் அவருக்கு குழந்தை பிறக்கவுள்ளது. எனவே, தன் புகைப்படத்தை பகிர்ந்து ‘இன்னும் 3 மாதம்தான் இருக்கிறது. என் உடலில் அதிசயம் நிகழ்ந்துள்ளது. இது எங்களின் 4 வருட கனவு. ரசிகர்களின் ஆசிர்வாதம் எங்களுக்கு வேண்டும்’ என பதிவிட்டுள்ளார்.
இதைத்தொடர்ந்து ரசிகர்கள் பலரும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.





