கூட்டத்தை பார்த்து நம்பிராதீங்க.. எல்லாத்தையும் பார்த்தவள் நான்! விஜய்க்கு அட்வைஸ் கொடுத்த நடிகை

ஒரே ஒரு படம்: விஜய் அஜித் இருவரும் சேர்ந்து நடித்த ஒரே படம் ராஜாவின் பார்வையிலே. அந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்தவர் இந்திரஜா. அவர் முதன்முதலில் உழைப்பாளி படத்தில் சிறு வயது ரஜினிக்கு அக்காவாக நடித்திருப்பார். அப்போது அந்த படத்தில் இந்திராஜாவுக்கு வயது ஏழு. அதன் பிறகு ராஜாவின் பார்வையிலே படத்தில் ஹீரோயினாக நடித்திருப்பார். ஆனால் தமிழில் சொல்லிக் கொள்ளும்படி அவர் எந்த படங்களிலும் நடிக்கவில்லை. எங்கள் அண்ணா படத்தில் மட்டும் நீண்ட வருடங்களுக்கு பிறகு நடித்திருந்தார்.
தெலுங்கில் தான் மிக ப் பெரிய ஒரு முன்னணி நடிகையாக திகழ்ந்தவர். தெலுங்கில் ஒரு வருடத்தில் 13 ,14 படங்களில் கூட நடித்திருக்கிறாராம். தமிழில் கார்த்திக் கவுண்டமணி நடித்த லக்கி மேன் திரைப்படத்தின் ஒரிஜினல் தெலுங்கு படத்தில் ஹீரோயின் ஆக நடித்தவர் இந்திரஜா. தமிழை விட அந்த படம் தெலுங்கில் சூப்பர் டூப்பர் ஹிட். இப்படி பல பெருமைக்கும் சொந்தக்காரர் தான் இந்திரஜா. இவர் சமீபத்திய ஒரு பேட்டியில் விஜயைப் பற்றியும் அவருடைய அரசியலை பற்றியும் அவருடைய கருத்துக்களை கூறியிருக்கிறார். ராஜாவின் பார்வையிலே படத்தில் நடிக்கும் பொழுது இந்திரஜாவும் விஜயும் அப்போதுதான் சினிமாவில் என்ட்ரியான நேரம்.
விஜய்க்கு ஜோடியாக நடித்தவர்: அதனால் இருவரும் கேசுவலாக பல விஷயங்களை பகிர்ந்து இருக்கிறார்கள். ஆனால் இப்போது பல பேர் சொல்லி நான் கேள்விப்பட்டிருக்கிறேன். அவர் சரியாக யாரிடமும் ஜெல்லாக மாட்டார் என்று. ஆனால் எனக்கு அந்த நேரத்தில் அப்படி எதுவும் விஜய் இடம் தோன்றவில்லை என இந்திரஜா கூறினார். ஆனால் அப்படி இருந்தவர் இன்று ஒரு பெரிய மாநாட்டையே நடத்தி அனைவரையும் ஆச்சரியப்படுத்துகிறார். அதனால் அவருக்கு என்னுடைய ஒரே ஒரு கருத்து என்னவெனில் கூட்டத்தை பார்த்து மட்டும் நம்பி விடாதீர்கள். அதை எப்படி ஓட்டாக மாற்ற வேண்டும் என்பதில் முயற்சி எடுங்கள்.
ஏனெனில் வருகிற கூட்டம் எல்லாமே ஓட்டாக மாறும் என்பது நிச்சயம் கிடையாது. அதனால் உங்களுக்கு வாழ்த்துக்கள் என கூறி இருக்கிறார். இந்த அளவுக்கு விஜய்க்கு ஒரு நல்ல அக்கறையுடன் இந்திரஜா கூறுகிறார் என்றால் அதற்கு காரணம் சிரஞ்சீவி கட்சி ஆரம்பிக்கும் போதும் சரி பவன் கல்யாண் கட்சி ஆரம்பிக்கும் போதும் சரி இவர் பக்கத்தில் இருந்து பார்த்திருக்கிறாராம். எப்படி இருந்தது என்பதை பார்த்திருக்கிறாராம். ஆனால் அது ஓட்டாக மாறும் விஷயம் என்பது பெரிய கேம். அதாவது உங்க மேல பாசம் இல்லாமல் இல்லை. உங்க மேல் மரியாதை இல்லாமல் இல்லை. அபிமானமும் இல்லாமல் கிடையாது.
சாதாரண விஷயம் கிடையாது: அது எல்லாமே இருக்கும் .நீங்க தான் அவர்களுடைய வீட்டுக்கு பிள்ளை மாதிரி என பார்ப்பார்கள். சிரஞ்சீவி சாரை தெலுங்கு பேசுற ஒவ்வொருத்தருமே அன்னையா தான் கூப்பிடுவாங்க. பவன் கல்யாணை எல்லோருமே பவர் ஸ்டார் என்று தான் கூப்பிடுகிறார்கள். எல்லாருக்கும் அவங்கனா அபரிமிதமான ஒரு விருப்பமும் இருக்கிறது. ஃபேன் பேஸும் இருக்கிறது. ஆனால் அரசியல் என்பது முற்றிலும் வித்தியாசமானது. அதனால் நீங்கள் கால்குலேட் போடுகிற மாதிரி அரசியல் இருக்காது. வேற மாதிரி இருக்கும். அது எல்லாத்துக்குமே கரெக்டா நம்மளை வழிநடத்தவர்கள் இருக்க வேண்டும்.
அதே மாதிரி அது தோல்வியும் கிடையாது. ஒருவேளை நீங்கள் நினைத்த நம்பர் வரவில்லை. நீங்கள் நினைத்த பயணம் இல்லை. ஒரு சில விஷயங்கள் நீங்கள் எதிர்பார்க்கிற மாதிரி நடக்கவில்லை என்றால் அது தோல்வியே கிடையாது. அரசியலில் அனைவருமே புரிந்து கொள்ள வேண்டியது என்னவெனில் சினிமா மாதிரி ஒரு படம் ஓடலைனா அது தோல்வி. ஓடுச்சுனா அது வெற்றி. அந்த மாதிரி பாலிடிக்ஸ் கிடையாது. நீங்க தோற்கும் போது நிறைய கேம் பண்ணுவீங்க. ஜெயிக்கும் போது நிறைய இழப்பீங்க .இரண்டுக்குமே நீங்கள் தயாராகத்தான் வரணும்.
தகுதி இருக்கிறது: இது வேற. இந்த கேம்மே வேற. அதனால் எனக்குத் தெரிந்து விஜய் அவர்களுக்கு சரியான கைடன்ஸ், சரியாக அவரை வழி நடத்துறவங்க பக்கத்துல இருந்தால் போதும். வேற எதுவுமே அவருக்கு தேவை கிடையாது. ஒரு மனிதனாக அவர் ரொம்ப ரொம்ப நல்ல மனிதர். நல்ல மனசு. மக்களுக்காக சிந்திக்க கூடிய ஒரு நபர் தான். அதனால் நிச்சயமாக அவர் தலைவராக எல்லா தகுதிகளும் இருக்கின்றது. ஆனால் அரசியல் களம் என்பது வேறு. அதனால் இதுக்கு அவர் பக்கத்தில் இருக்கிறவங்களும் ரொம்ப ரொம்ப அவர பார்த்து வழிநடத்தக் கூடியவர்களாக இருக்கணும் என இந்திரஜா கூறியிருக்கிறார்.