பழம்பெரும் நடிகை ஜெயந்தி காலமானார்... திரைத்துரையினர் இரங்கல்...

by adminram |

f3cf77f408f84f4a9404b7a749a18f0e

தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் என அனைத்து மொழிகளிலும் 500க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்தவர் பழம்பெரும் நடிகை ஜெயந்தி. எதிர் நீச்சல், இருகோடுகள், பாமா விஜயம், புன்னகை போன்ற திரைப்படங்கள் மூலம் ரசிகர்களிடம் பிரபலமானார். பல்வேறு விருதுகளையும் பெற்றுள்ளார்.

கடந்த சில வருடங்களாக இவர் ஆஸ்துமா நோயால் பாதிக்கப்பட்டு பெங்களூரில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

இந்நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று காலை அவர் உயிரிழந்தார். அவரின் மறைவுக்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Next Story