கனகா இப்ப எப்படி இருக்காங்க?!... வீடியோ பார்த்து அதிர்ந்து போன ரசிகர்கள்....

by adminram |

1f76d84cd4ebcaffee85edc5badebe1f-1

ராமராஜன் நடித்து மெகா ஹிட் அடித்த ‘கரகாட்டக்காரன்’ திரைப்படம் மூலம் பட்டிதொட்டியெங்கும் பிரபலமானவர் நடிகை கனகா.. பழம்பெரும் நடிகை தேவிகாவின் மகள். ராமராஜனுக்கு ஜோடியாக மேலும் சில படங்களில் நடித்தார். ரஜினி, பிரபு உள்ளிட்ட முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாகவும் நடித்தார். குறிப்பாக பெண்களுக்கு பிடித்த நடிகையாக அவர் இருந்தார். திடீரென அவரை திரைப்படங்கள் பார்க்க முடியவில்லை.

49b0da7de2f8e9421e3df31d414e61bc
kanaka

சொத்து விவகாரத்தில் அப்பாவுடன் தகராறு, கை கூடாத காதல், கை விட்ட கணவர், பல வருடங்கள் வீட்டை விட்டு வெளியே வராமல் வசித்தது என அவரை பற்றி வெளியான செய்திகள் அதிர்ச்சியாக இருந்தது. அவருக்கு புற்றுநோய் பாதிப்பு, இறந்துவிட்டார் என்றெல்லாம் செய்திகள் வெளிவந்தன. ஆனால், அதில் உண்மை இல்லை என கனகா மறுத்தார். இவரை பற்றி தவறான செய்திகளை யுடியூப்பில் பலரும் பரப்பை வந்தனர்.

6ddeb986b570fe9f854cd764f4010ebc
kanaka

இந்நிலையில், பல வருடங்களுக்கு பின் அவர் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில், தான் நடிக்க வந்து 30 வருடங்கள் ஆகிவிட்டது. தற்போது வயதாகி விட்டது. நடிக்க வேண்டுமெனில் நான் முதலில் இருந்து துவங்க வேண்டும். கற்றுக்கொள்ளும் ஆர்வம் இருக்கிறது. உங்களுக்கு பிடித்தால் சொல்லுங்கள். உங்கள் விமர்சனங்களை சொல்லுங்கள். மாற்றிக்கொள்ள தயாராக இருக்கிறேன் என அதில் பேசியுள்ளார்.

ஆனால், அவரின் தோற்றம் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏனெனில், பழைய கனகாவுக்கும், இவருக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.

Video courtesy to Behindwoods....

Next Story