More

காதலிக்க சொல்லி மிரட்டுகிறார் – நடிகர் லாரன்ஸ் தம்பி மீது நடிகை புகார் !

நடிகர் ராகவா லாரன்ஸின் தம்பி எல்வின் என்பவர் தன்னைக் காதலிக்க சொல்லி மிரட்டுவதாக துணை நடிகை ஒருவர் புகார் அளித்துள்ளார்.

Advertising
Advertising

நடிகர் ராகவா லாரன்ஸ் தனது நடனத்திறமைக்காவும், நடிப்புக்காகவும் மட்டுமல்லாமல் சமூக சேவைகளுக்காகவும் மக்கள் மத்தியில் பிரபலமாகியுள்ளார். அவருக்கு எல்வின் என்ற ஒரு தம்பி இருக்கிறார். அவரும் சில படங்களில் நடித்துள்ளார்.

இந்நிலையில் அவர் மீது தெலுங்கு சினிமாவைச் சேர்ந்த நடிகை ஒருவர் புகார் கூறியுள்ளது சர்ச்சைகளைக் கிளப்பியுள்ளது. அவரது புகாரில் ‘படங்களில் நடிக்கும் போது எனக்கு எல்வின் பழக்கமானார். ஆனால் அதன் பின்னர் தன்னைக் காதலிக்க சொல்லி என்னை வற்புறுத்தி வருகிறார். இது தொடர்பாக

அவர் மீது நான் போலீசாரிடம் புகார் அளித்தப்போதும், அவரது செல்வாக்கை பயன்படுத்தி தன்னை அவதூறு வழக்கில் சிறைக்கு செல்லவைத்துவிட்டார்’ எனக் கூறியுள்ளார்.

மேலும் தனக்குக் கொலை மிரட்டல் விடுப்பதாகவும் எனவே பாதுகாப்பு அளிக்க வேண்டுமெனவும் அவர் கூறியுள்ளார். இந்த புகார் திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Published by
adminram

Recent Posts