அந்த இடத்தில் டாட்டூ… நம்ம மாளவிகாவா இது?… டிரெண்டிங் புகைப்படம்….

சுந்தர்.சி இயக்கிய ‘உன்னைத்தேடி’ திரைப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் மாளவிகா. அதன்பின் ரோஜாவனம், வெற்றிக்கொடி கட்டு, திருட்டுபயலே, வியாபாரி உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்தார். 

வெற்றிக்கடி கட்டு படத்தில் இடம் பெற்ற ‘கருப்புதான் எனக்கு பிடிச்ச கலரு’ பாடலும், சித்திரம் பேசுதடி படத்தில் இடம் பெற்ற ‘வாலை மீனுக்கும் விலங்கு மீனுக்கும் கல்யாணம்’ என்கிற பாடலும் பெரும் ஹிட் ஆகி அவரை பட்டி தொட்டியெங்கும் கொண்டு சேர்த்தது.

அதன்பின், கதாநாயகி வாய்ப்புகள் குறைந்து ஒரு பாடலுக்கு நடனம், சிறப்பு தோற்றம் என நடிக்க வாய்ப்பு வந்ததால் மும்பை தொழிலதிபர் ஒருவரை திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆனார்.அவருக்கு குழந்தைகளும் உள்ளனர்.

இந்நிலையில், மீண்டும் லைம் லைட்டிற்கு வந்துள்ள அவர் கவர்ச்சி உடைகளில் போஸ் கொடுத்து புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார். அதிலும், முதுகில் டாட்டு வரைந்து நீச்சல் குளத்தில் நிற்கும் புகைப்படங்கள் சமூகவலைத்தளங்கலில் வைரலாகி வருகிறது.இதைபார்க்கும் போது மீண்டும் சினிமாவில் அவர் ஒரு ரவுண்டு வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Published by
adminram