Connect with us

Cinema News

பர்சனலான விஷயத்தை பேசாதீங்கன்னு சொன்ன மீனாவுக்கு பதிலடி கொடுத்த பிரபலம்..!

மீனா சமீபத்தில் மத்திய மந்திரி ஒருவர் வீட்டுக்குப் போய் சர்ச்சையைக் கிளப்பி இருந்தார். அதுபற்றிய விவரம் வருமாறு….

சோஷியல் மீடியாவுல எங்க படங்களைப் பாருங்க. விமர்சனம் பண்ணுங்க. ஆனா ரொம்ப பர்சனலான விஷயத்தை ஏன் பேசறீங்க. ஏன் எங்க வீட்டுக்குள்ள அப்படி வர்றீங்கன்னு ராதிகாவும் சரி. மீனாவும் சரி. அப்படி கேட்குறாங்க. அது ஹெல்தியான விஷயம்னு நினைக்கிறீங்களான்னு நிகழ்ச்சி தொகுப்பாளர் கேட்க, அதற்கு வலைப்பேச்சு பிஸ்மி தெரிவித்துள்ள பதில் இதுதான்.

நீங்க ஏன் உங்க பர்சனல் விஷயத்தை எங்க கிட்ட சொல்றீங்க. அதுதான் நான் கேட்கக்கூடிய முதல் கேள்வி. ராதிகா ஒரு நடிகை. நீங்க நடிக்கிற படத்தைப் பற்றி மக்கள் கிட்ட சொல்லலாம். சில வருடங்களுக்கு முன்னாடி சமூக ஊடகங்கள் கிடையாது. அப்போ ஊடகங்கள் மூலமாகத் தான் மக்கள் கிட்ட சொல்லணும்.

இப்போ அது இருக்குறதால நேரடியாகவே போயிடும். நடிகர், நடிகைகள் அதோடு நிறுத்துனா பரவாயில்ல. காதுகுத்து, கிரகப்பிரவேசம், கல்யாணம், டைவர்ஸ்னு எதுவானாலும் அதுல சொல்றீங்க.

நீங்க தான பர்சனலான விஷயத்தை சொல்றீங்க. எல்லாத்தையும் மீறி ஊடகங்கள் வீட்டுக்கு வந்துடுச்சு. ஹோம் டூர், பாத்ரூம் டூர்னு வர்றாங்க. நீங்க கதவை விரியத் திறந்துவிட்டுட்டு இது தான் எங்க வீட்டு பாத்ரூம், பெட்ரூம்னு சொல்றீங்க. அப்படின்னா ஆடியன்ஸ் அதுக்குப் பழகிடுவான். அவன் கேட்பான்.

அதனால ஊடகங்கள் அவனுக்கு பதில் கொடுக்கும். அப்படின்னா இதுக்கு அடிப்படை காரணமே நீங்க தான். நீங்க ஆரம்பத்திலேயே என் படத்தைப் பத்தி மட்டும் தான் பேசுவேன். என் தொழிலப் பத்தி மட்டும் தான் பேசுவேன். அப்படிங்கறதுல நீங்க உறுதியா இருந்தா நீங்க இந்தக் கேள்வியைக் கேட்பதற்கான முழு உரிமையும் உங்களுக்கு இருக்கு.

ஆனா நீங்களே பல்வேறு சந்தர்ப்பங்கள்ல உங்களது பர்சனல் விஷயங்களை ஊடகங்களில் பகிர்ந்துக்கிட்டீங்க. அதனால இந்தக் கேள்வியை எழுப்ப முடியாது. என்னைப் பொருத்தவரைக்கும் சினிமா பத்திரிகை இருக்குன்னா சினிமாவைப் பத்தி மட்டும் தான் பேசணும். ஆனா இன்னைக்கு ஊடகங்கள் துரதிர்ஷ்டமா சினிமாக்காரங்களைப் பத்திப் பேசிக்கிட்டு இருக்கு.

ரஜினி, கமல், சிம்புக்கு எது எது பிடிக்கும்னு சொல்லி மக்களையும் மழுங்கடிச்சிட்டாங்க. மீனாவும் எனக்கு அடுத்து திருமணம் நடக்கப் போகுதுன்னு சொல்றீங்க. யார் கூட தொடர்பு இருக்கு? இப்படி எல்லாம் பேசாதீங்கன்னு சொல்றாங்க. அதுக்கு என்ன காரணம்னா ஒரு மத்திய மந்திரி வீட்டுல பர்சனலான விஷயம் நடக்குது.

அந்த இடத்துல நீங்க இருக்கீங்க. அப்படின்னா அங்க நீங்க எதுக்குப் போனீங்கன்னா கேள்வி எழுமா, இல்லையா? அந்த நேரத்தில் ஒருவர் இந்த மாதிரி ஒரு விஷயம். அதனால தான் அங்க இருந்தாங்கன்னு சொல்றாரு. அது பொய்யாகும்பட்சத்தில் செய்ய வேண்டியது ரெண்டு விஷயம் தான். ஒண்ணு தன்னிலை விளக்கம் கொடுக்கணும். நான் ஏன் மத்திய மந்திரி வீட்டுல இருந்தேன்னு சொல்லணும்.

இன்னொன்னு அங்க இருந்தது குறித்து அவர் சொன்னது தப்புன்னா அவர் மேல சட்ட நடவடிக்கை எடுக்கணும். ரெண்டையுமே பண்ணாம, நீங்க வராதீங்க. அவதூறாப் பேசாதீங்கன்னு சொல்றதை எப்படி ஏத்துக்க முடியும்? இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

google news
Continue Reading

More in Cinema News

To Top