அதை அடுத்து அவர்கள் மீரா மிதுனை சமூகவலைதளங்களில் ஆபாசமாக திட்ட ஆரம்பித்தனர். ஆனால் அப்படி ஆபாசமாக திட்டியவர்களில் பலர் சூர்யா ரசிகர்கள் இல்லை என சொல்லப்படுகிறது. ஆனாலும், தன்னை திட்டியவர்களுக்கு பதிலளிக்கும் விதமாக பேசியுள்ள மீரா மிதுன் ‘இனிமேல் என்னை யாராவது ஆபாசமாக திட்டினால் , நானும் சூர்யாவின் மனைவி ஜோதிகாவையும், விஜய்யின் மனைவி சங்கீதாவை என்னை சொல்லி திட்டும் அதே வார்த்தையில் திட்டுவேன் எனக் கூறியுள்ளார்.
இந்த விவகாரம் பெரும் சர்ச்சைக்குள்ளாக விஜய் ரசிகர்கள் மீரா மிதுன் மீது போலீசில் புகார் அளித்தனர், அவரை எந்த படத்திலும் ஒப்பந்தம் செய்யக்கூடாது என கோரிக்கை வைத்து வருகின்றனர். இந்நிலையில் இது குறித்து தற்ப்போது பிரபல காமெடி நடிகை ஆரத்தி தனது ட்விட்டருக்கு விஜய், சூர்யா குறித்தும் அவர்களது மனைவிகளை குறித்தும் அவதூறு பேசிய மீரா மிதுனை கண்டித்து பதிவிட்டுள்ளார்.
அந்த பதிவில், “மென்மையான குடும்பத்தலைவி சங்கீதா அக்கா,நடிகையாக இருப்பினும் ஜோ..தீ என்று எல்லா மக்களுக்கும் தெரியும்… தரமற்ற தாய்கிழவிக்கு தவடை கிழியும் நேரம் வந்துவிட்டது… வன்மையாக கண்டிக்கிறேன். பெண் இனத்தின் வெட்கக்கேடு, இதெல்லாம் மாதர் சங்கம் காதில் கேக்கலையா??” என்று பதிவிட்டு கொந்தளித்துள்ளார்.
துல்கர் சல்மான்…
கார்த்திக் பல…
Pongal Release:…
Sun serials:…
Veera Dheera…