அஜீத் படத்தில் நடித்து விட்டு சோகமயமான நக்மா... எல்லாத்துக்கும் காரணமே அந்த விஷயம் தானாம்..!
அஜீத் நடிக்கிற தீனா படத்துல ஒரு பாட்டுக்கு டான்ஸ் ஆடுறதுக்கு ஒரு முக்கியமான நடிகை வர்றதா பத்திரிகையில சொன்னாங்க. அவங்களுக்கு இத்தனை லட்சம் சம்பளம்னு எல்லாம் பரபரப்பா சொன்னாங்க. அதுவும் பத்திரிகையில செய்தியா வந்தது.
'யார் அந்த நடிகை யார் அந்த நடிகை..'ன்னு எல்லாரும் கேட்க ஆரம்பிச்சாங்க. அப்புறம் அதுக்கு ஆரம்பத்துல செட் போட்டு பத்திரிகை, மீடியாக்களை எல்லாம் சஸ்பென்ஸா கூட்டிட்டுப் போனாங்க. அங்கே போய் பார்த்ததும் தான் தெரியுது. அது நக்மா.
அது தான் 'வத்திக்குச்சி பத்திக்காதுடா' சாங். நக்மா வா இதுன்னு எல்லாரும் ஆச்சரியப்பட்டாங்க. அந்த சமயத்துல எல்லாரிடமும் சிரிச்சி பேசிக்கிட்டுப் போயிட்டாங்க. ஆனா அவங்க முகத்துல கூட சின்ன சோகம் இருந்தது. ஏன்னா அவரோட அந்தப் பிரபலம் இருக்கு பார்த்தீங்களா அது பெரிய பிரபலம். காதலன், பாட்ஷா எல்லாம் அவ்வளவு பெரிய ஹிட்.
பாட்ஷாவுக்குப் பிறகு அவரோட ரேஞ்சே வேற லெவல். ரகசிய போலீஸ் படத்துக்கு ஒரு பாட்டு சுவிட்சர்லாந்துல எடுத்தாங்க. அது பெரிய ஹிட். சரத்குமார் சொல்லித்தான் போயி எடுத்ததா சொல்றாங்க. அப்படி பிரபலமான நக்மா ஒரு பாட்டுக்கு டான்ஸ் ஆடுறாங்க. அந்தப் பாட்டு ரொம்ப பெரிய ஹிட்.
உச்சாணிக்கொம்புல இருந்துட்டு திடீர்னு ஒரு பாட்டுக்கு டான்ஸான்னு எல்லாரும் ஆச்சரியப்பட்டாங்க. நாலஞ்சு நாள் செட்ல இருந்தாங்க. முதல் நாள் யாரிடமும் சரியாவே பேசல. காதலன், லவ்பேர்ட்ஸ், பாட்ஷா எல்லாம் பார்த்துட்டு நம்மை பிரமிப்பா பார்த்துருப்பாங்க. பல சினிமா பத்திரிகைகளில் அட்டைப்படங்களில் இடம்பெற்றிருந்தோம்.
இன்னிக்கு நம்ம ரேஞ்ச் வந்து ஒரு பாட்டுக்காக உட்கார்ந்துக்கிட்டு இருக்கோம்னு அப்படின்னு சின்ன வருத்தம். ரெண்டாவது மூணாவது நாள்ல இருந்து பேச ஆரம்பிச்சிட்டாங்க. நக்மா யாருன்னா ஜோதிகாவோட அக்கா இதுதான் நமக்குத் தெரியும். மேற்கண்ட தகவலை பிரபல பத்திரிகையாளர் செய்யாறு பாலு தெரிவித்துள்ளார்.