ஒரே ஹோட்டலில் பிரபுதேவா - நயன்தாரா!.... களோபரமான பாண்டிச்சேரி.....

by adminram |

8578bba220b7191f1d60282add22075e

சிம்புவுடன் காதல் ஏற்பட்டு அவரை விட்டு பிரிந்த நயன்தாராவுக்கு சில வருடங்களுக்கு பின் ‘வில்லு’ படத்தில் நடித்த போது நடிகர் மற்றும் அப்படத்தின் இயக்குனர் பிரபுதேவாவுடன் காதல் ஏற்பட்டது. அவரை திருமணம் செய்வதற்காக மதம் மாறும் வரை சென்றார் நயன்தாரா. ஆனால், அந்த காதலும் அவருக்கு கை கூடவில்லை. அதன்பின் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் ‘நானும் ரவுடிதான்’ திரைப்படத்தில் நடித்த போது அவருடன் காதல் ஏற்பட்டு தற்போது வரை இருவரும் காதலர்களாக வலம் வருகின்றனர். திருமணம் செய்து கொள்ளவில்லையே தவிர இருவரும் லிவ்விங் டூ கெதர் வாழ்க்கையை வாழ்ந்து வருகிறனர். தங்களுக்கு நிச்சயதார்த்தம் முடிந்துவிட்டது என நயனே சமீபத்தில் ஒரு பேட்டையில் ஓப்பனாக கூறியிருந்தார்.

e25f0f3fc7693d6e48ba095c2c5b7182

தற்போது மீண்டும் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ என்கிற படத்தில் நயன்தாரா நடித்து வருகிறார். இப்படத்தில் விஜய் சேதுபதி, சமந்தா ஆகியோரும் நடித்து வருகின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது புதுச்சேரியில் நடைபெற்று வருகிறது.

இது ஒருபுறம் இருக்க, ‘குலோபகாவலி’ திரைப்படத்தின் இயக்குனர் கல்யாணின் இயக்கத்தில் மீண்டும் பிரபுதேவா நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பும் புதுச்சேரியில் நடைபெற்று வருகிறது. இதில் நயன்தாரா, விக்னேஷ் சிவன் தங்கியிருக்கும் அதே ஹோட்டலில் நயன்தாரா தங்கியிருக்கும் அறைக்கு 4 அறைகள் தள்ளி பிரபுதேவாவுக்கும் அறை ஒதுக்கப்பட்டிருந்தது. ஆனால், இந்த தகவல் அவர்களுக்கே தெரியவில்லை.

a487fd92553441f2da196c1ad9250e7b

படப்பிடிப்பு முடிந்து ஹோட்டலுக்கு வந்த நயன்தாரா பிரபுதேவா பால்கனியில் வெளியே நிற்பதை பார்த்து அதிர்ந்து போய்விட்டாராம். கோபமடைந்த அவர் படக்குழுவினரை அழைத்து உடனடியாக வேறு ஹோட்டலில் எனக்கு அறை ஒதுக்க வேண்டும் என கூச்சல் போட்டுள்ளார். ஆனால், அவரின் நேரம் எந்த பெரிய ஹோட்டலிலும் அறைகள் இல்லை. எனவே, வேற தளத்தில் அவருக்கு அறை ஒதுக்கப்பட்டுள்ளதாம்.

7078170a24ab43c27c9bb241abc0f5b4-1

இதுவே வேறு தயாரிப்பாளராக இருந்திருந்தால் படப்பிடிப்பில் கலந்து கொள்ளாமல் கிளம்பியிருப்பார் நயன்தாரா. ஆனால், அப்படத்திற்கு அவர்தான் தயாரிப்பாளர் என்பதால் வேறு வழியின்றி அந்த ஹோட்டலிலேயே தங்கி நடித்து வருகிறார் என சிரிக்கிறது சினிமா வட்டாரம்....

சினிமாவுல இதலாம் சகஜமப்பா!...

Next Story