நீ செம க்யூட் புஜ்ஜிமா.. Black and White ஹீரோயினாக மாறிய ஓவியா....
விமல் நடித்த ‘களவாணி’ திரைப்படம் மூலம் அறிமுகம் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு அறிமுகமானவர் நடிகர் ஓவியா. அதன்பின் அவர் சில திரைப்படங்களில் நடித்தார். பெரும்பாலான திரைப்படங்களில் இரு கதாநாயகிகளில் ஒருவராக நடிக்கும் வாய்ப்பே கிடைத்தது.
ஆனால் ‘பிக்பாஸ் நிகழ்ச்சி’ அவரது வாழ்க்கையை மாற்றியது. மனதில் பட்டத்தை யாருக்கும் பயப்படாமல் தைரியமாக பேசியும். மிகவும் நேர்மையாக நடந்து கொண்டதாலும் மக்கள் அனைவருக்கும் இவரை பிடித்துப்போனது. பலரும் இவரின் நடவடிக்கைகளை பாராட்டினார்கள். ஓவியா ஆர்மி படைகள் எல்லாம் சமூக வலைதளங்களில் வலம் வந்தன. பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் கிடைத்த பெயரை ஓவியா பயன்படுத்திக் கொண்டு தமிழ் திரையுலகில் வலம் வருவார் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், அவரோ 90 ml போன்ற கிளுகிளுப்பு திரைப்படத்தில் நடித்து பெயரை கொடுத்துக்கொண்டார். அதன்பின் அவருக்கு பெரிதாக வாய்ப்புகள் அமையவில்லை. அவ்வப்போது டிவிட்டரில் தன்னுடைய கருத்துக்களை பதிவிட்டு வருகிறார். Gobackmodi ஹேஷ்டேக்கை பதிவிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார்.
மேலும், இன்ஸ்டாகிராமில் தன்னுடைய புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார். தற்போது உடல் எடையை மிகவும் குறைத்து எலும்பும் தோலுமாக மாறி அசிங்கமான தோற்றத்திற்கு மாறியுள்ளார். சமீபத்தில் இது தொடர்பான 2 புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தார்.
இந்நிலையில், பழைய கருப்பு வெள்ளை திரைப்படங்களில் வரும் கதாநாயகிகள் போல சேலை அணிந்து,மேக்கப் போட்டு சமீபத்தில் போட்டோஷுட் நடத்தி அந்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் அவர் பகிர்ந்துள்ள புகைப்படம் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.