களவாணி உள்ளிட்ட சில திரைப்படங்களில் நடித்திருந்தாலும் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் நடிகை ஓவியா. இவருக்கு உருவானது போல் இதுவரை பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட எவருக்கும் இதுபோல ரசிகர்கள் உருவாகவில்லை. ரசிகர்கள் இணைந்து ஓவியா ஆர்மியும் உருவாக்கப்பட்டது.
இந்நிலையில், ‘மெர்லின்’ என்கிற வெப்சீரியஸில் ஓவியா நடித்துள்ளார்.இந்த வெப்சீரியஸ் நாளை ‘ஆரஞ்சு மிட்டாய்’ என்கிற யுடியூப் சேனலில் வெளியாகவுள்ளது. இந்த தகவலை ஓவியா தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இந்த செய்தி ஓவியா ஆர்மியினருக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ் திரையுலகில்…
ஒரு நடிகர்…
நடிகர் ஜீவா…
இந்த பொங்கல்…
முருங்கைக்காய் என்றாலே…