More

நடிகை பரவை முனியம்மா காலமானார் – ரசிகர்கள் அதிர்ச்சி

நாட்டுப்புற பாடகியாக இருந்து வந்த பறவை முனியம்மா தூள் படத்தில் விக்ரமின் பாட்டியாக நடித்து ரசிகர்களை கவர்ந்தார். அப்படத்தில் அவர் பாடிய ‘சிங்கம் போல’ எட்டுத்திக்கும் எதிரொலித்தது. நடிகர் விவேக்குடன் பல படங்களில் நடித்தார்.தொலைக்காட்சிகளில் சமையல் நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டார்.

Advertising
Advertising

மதுரை மாவட்டம் பரவை என்ற ஊரை சேர்ந்தவர் என்பதால் அதுவே அவரின் பெயருக்கு முன் சேர்ந்து கொண்டது. தமிழக அரசின் கலைமாமணி விருதை பெற்றவர். சில வருடங்களாக உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

இந்நிலையில், இன்று அதிகாலை 2.30 மணியளவில் அவர் இன்று மரணமடைந்தார்.

Published by
adminram

Recent Posts