
ஜீவா நடித்த ‘தெனாவட்டு’ திரைப்படம் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களிடம் பிரபலமானவர் பூனம் பாஜ்வா. அதன்பின் சேவல், தம்பிக்கோட்டை, கச்சேரி, ரோமியோ ஜுலியட், முத்தின கத்திரிக்கா உள்ளிட்ட சில படங்களில் நடித்தார்.

ஆனாலும் அவரால் முன்னணி நடிகையாக முடியவில்லை. மேலும், உடலில் எடை கூடி ஆண்டி லுக்குக்கு மாறினார். அரண்மனை 2, குப்பத்துராஜா ஆகிய திரைப்படங்களில் ஆண்டியாகவே நடித்தார். அதோடு, ஒரு பாடலுக்கு நடனம்,கவர்ச்சியான வேடம் என கிடைக்கும் வாய்ப்புகள் எதையும் விடாமல் நடித்து வருகிறார்.

அதன்பின் உடல் எடையை குறைத்து பழைய அழகுக்கு திரும்பியுள்ளார். அதோடு, சமீபநாட்களாக சமூகவலைத்தளத்தில் ஆக்டீவாக இருந்து வரும் பூனம் பாஜ்வா அவ்வப்போது செம கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்து வருகிறார்.

இந்நிலையில், தீடீரென வெள்ளை உடை அணிந்து தேவதைப் போல போஸ் கொடுத்து புகைப்படங்களை பகிர்ந்து லைக்ஸ்களை அள்ளியுள்ளார். அவர் அந்த புகைப்படங்களை பகிர்ந்த சில மணி நேரங்களில் ஒரு லட்சத்திற்கும் மேல் லைக்ஸ்களை அவரின் புகைப்படங்கள் பெற்றுள்ளது.

இதைப்பார்த்த நெட்டிசன்கள் ‘நீ செம க்யூட். ஐ லவ் யூ’ என ஜொள்ளு விட்டு வருகின்றனர்.






