நடன நிகழ்ச்சியில் இளைஞனை கடித்து முத்தம் கொடுத்த பூர்ணா!

by adminram |   ( Updated:2021-09-19 11:01:50  )
poorna
X

5741fe8b2871e735b6708bd03d9e368c

கேரளாவை சேர்ந்த நடிகை பூர்ணா முனியாண்டி விலங்கியல் மூன்றாம் ஆண்டு படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகமானார். முதல் படமே அவருக்கு நல்ல வராவாக அமைந்ததால் அடுத்தடுத்து ஹிட் படங்களில் நடித்து ஸ்ட்ராங்கான இடத்தை பிடித்துவிடலாம் என நினைத்த நடிகைக்கு பின்னர் வாய்ப்புகள் சரியாக அமையாமல் வந்த வேகத்தில் மார்க்கெட் போய்விட்டது.

இருந்தும் தமிழில் கந்தகோட்டை, துரோகி, ஆடு புலி போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார். அதுமட்டுமல்லாது மலையாளம் மற்றும் தெலுங்கு மொழித் திரைப்படங்களிலும் நடித்துள்ள பூர்ணா தற்போது பட வாய்ப்புகள் இல்லாததால் கிடைப்பதை வைத்து பணம் சம்பாதித்து வருகிறார்.

அந்தவகையில் தெலுங்கு தொலைக்கட்சி ஒன்றில் தீ ஜோடி என்ற நடன நிகழ்ச்சிக்கு தொகுப்பாளராக இருந்து வருகிறார். அதில் நடுவராக பங்கேற்றுள்ள அவர் நன்றாக நடனமாடிய இளைஞன் ஒருவனை அழைத்து கன்னத்தில் முத்தமிட்டதோடு கடித்து கொஞ்சிய வீடியோ இணையத்தில் வெளியாகி விமர்சனத்திற்குள்ளாகியுள்ளது.

Next Story