திரிஷாவுடன் டேட்டிங் செய்தேன்!. ஆனா ஒர்க்அவுட் ஆகல!.. ஒப்பனா சொன்ன நடிகர்!...

by சிவா |
திரிஷாவுடன் டேட்டிங் செய்தேன்!. ஆனா ஒர்க்அவுட் ஆகல!.. ஒப்பனா சொன்ன நடிகர்!...
X

Actress Trisha: 22 வருடங்களாக சினிமாவில் நடித்து வருபவர் திரிஷா. மாடலிங் துறையில் இருந்து மெட்ராஸ் பழகி பட்டம் பெற்றபின் சினிமாவுக்கு வந்தவர். சினிமாவில் நான் நடிக்கவே மாட்டேன். எனக்கு அதில் ஆர்வமில்லை என சொன்னவர் இவர். ஆனால், சின்ன சின்ன வேடங்கள் மூலம் சினிமாவில் நடிக்க துவங்கினார்.

லேசா லேசா படம் மூலம் சினிமாவில் கதாநாயகியாக நடிக்க துவங்கினார். அதன்பின் தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் மாறி மாறி நடிக்க துவங்கினார். ஒரே நேரத்தில் தமிழ் மற்றும் தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் முன்னணி நடிகையாக மாறினார். விஜய், அஜித், விக்ரம், சூர்யா என பலருடனும் ஜோடி போட்டு நடித்தார்.

அதேநேரம், நயன்தாராவுக்கும் இவருக்கும் போட்டி ஏற்பட்டு அதில் நயனே வெற்றி பெற்றார். தமிழ், தெலுங்கு இரண்டிலும் நயன் மார்க்கெட்டை பிடித்தார். அதோடு, புதுப்புது நடிகைகள் வந்ததால் திரிஷா மார்க்கெட் இழந்தார். ஆனாலும், கிடைக்கும் வாய்ப்புகளில் அவ்வப்போது நடித்து வந்தார்.

பொன்னியின் செல்வன் படத்தின் வெற்றி திரிஷாவை மீண்டும் பிரபலமாக்கியிருக்கிறது. எனவே, மீண்டும் விஜயுடன் லியோ, அஜித்துடன் விடாமுயற்சி என டேக் ஆப் ஆகிவிட்டார். விஜய்க்கு மிகவும் நெருக்கமானவராக இருப்பதால் இருவரையும் இணைத்து கிசுகிசுக்களும் வருவது உண்டு. ஆனால், அதற்கெல்லாம் திரிஷா பதில் சொல்வது இல்லை.

திரிஷாவுக்கு 41 வயது ஆகிவிட்டது. ஆனால் இதுவரை திருமணம் செய்து கொள்ளவில்லை. 2015ம் வருடம் தொழிலதிபர் வருண் மணியனுடன் அவருக்கு திருமணம் நிச்சயமானது. ஆனால், சில மாதங்களில் திருமணம் நின்றுவிட்டது. அதன்பின் திரிஷா திருமணம் செய்துகொள்ளவில்லை. எல்லோரும் விவாகரத்து செய்வதை பார்க்கும்போது திருமணம் செய்யாமல் இருப்பதே நல்லது என நினைக்கிறேன் என திரிஷாவும் சொல்லியிருந்தார்.

ஒருபக்கம், பாகுபலி படத்தில் வில்லனாக நடித்த ராணாவுடனும் திரிஷாவுக்கு காதல் இருந்ததாக கிசுகிசுக்கப்பட்டது. அதன்பின் அது பிரேக்கப் ஆனது. இதுபற்றி ஊடகம் ஒன்றில் பேசியுள்ள ராணா ‘10 வருடங்களுக்கும் மேல் திரிஷா என் தோழியாக இருந்து வருகிறார். அவருடன் டேட்டிங் செய்தேன். ஆனால், ஒர்க் அவுட் ஆகவில்லை’ என சொல்லியிருக்கிறார்.

Next Story