Home > சினிமாவில் நுழைந்து 43 வருடம் - நடிகை ராதிகாவுக்கு குவியும் வாழ்த்து
சினிமாவில் நுழைந்து 43 வருடம் - நடிகை ராதிகாவுக்கு குவியும் வாழ்த்து
by adminram |
பிரபல நடிகை ராதிகா பாரதிராஜா இயக்கத்தில் 1978ம் ஆண்டு ஆகஸ்டு 10ம் தேதி வெளியான ‘கிழக்கே போகும் ரயில்’ படத்தில் அறிமுகமானார்.
அதன்பின் பல திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்து படிப்படியாக உயர்ந்து 80களில் முன்னணி நடிகையாக மாறினார். தற்போது அம்மா வேடத்தில் கலக்கி வருகிறார். ஒருபக்கம் சின்னத்திரையிலும் சித்தி, அண்ணாமலை, வாணி ராணி ஆகிய சீரியல்களில் அசத்தினார். ஒரு நேரத்தில் சின்னத்திரையிலும், சினிமாவிலும் நடித்து வந்தார். தற்போது சினிமாவில் மட்டும் கவனம் செலுத்தி வருகிறார்.
இந்நிலையில், அவர் நடிக்க வந்து 43 வருடங்கள் ஆகிவிட்டதால் திரைத்துறையிலும், சின்னத்திரையிலும் அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.
Next Story