சில திரைப்படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடித்திருந்தாலும் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் ரசிகர்களிடம் பிரபலமானவர் ரைசா வில்சன். பிக்பாஸ் வீட்டில் மிகவும் பந்தா காட்டியதால் ரசிகர்களுக்கு இவரை பிடிக்கவில்லை. ஏனெனில் மிகவும் அல்டாப் காட்டி ரசிகர்களின் அதிருப்திக்கு ஆளானார். தனுஷ் நடித்த வேலை இல்லா பட்டதாரி 2 உள்ளிட்ட சில படங்களில் தலை காட்டினார்.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் அவருடன் கலந்து கொண்ட ஹரிஷ் கல்யாணுடன் இணைந்து அவர் நடித்த ‘பியார் பிரேமா காதல்’ திரைப்படம் ரசிகர்களிடம் அவரை கொண்டு சேர்த்தது. ஹரிஸ் கல்யாண் – ரைசா வில்சன் ஜோடி வெற்றி ஜோடியாக பார்க்கப்பட்டது.
அப்படத்தை தொடர்ந்து மீண்டும் இருவரும் ‘தனுசு ராசி நேயர்களே’ படத்தில் ஹரிஸ் கல்யாணும், ரைசா வில்சனும் இணைந்து நடித்தனர். அதன்பின் பாலா இயக்கத்தில் விக்ரமின் மகன் துருவ் விக்ரம் நடித்த வர்மா திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்தார்.ஆனால், அவரின் போதாத காலம் அந்த திரைப்படம் வெளியாகவில்லை. எனவே, கிடைக்கும் வேடங்களில் நடித்து வந்தார். The Chase என்கிற படத்தில் கதாநாயகியாக நடித்து முடித்தார். ஆனால், இப்படம் இன்னும் வெளியாகவில்லை.
திடீரென ஒரு முக அழகு நிபுணரிடம் சென்று அவர் செய்த சிகிச்சையில் தனது முகம் வீங்கி விட்டதாக கூறி அவர் மீது ஒரு கோடி நஷ்ட ஈடு கேட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். ஆனால், தன் மீது அவதூறு பரப்புவதாக கூறி அவரும் ரைசா வில்சன் மீது வழக்கு தொடர்ந்தார். தற்போது தனது முகத்தில் உண்டான பிரச்சனைகள் சரியாக மீண்டும் ரைசா வில்சன் பழைய அழகுக்கு திரும்பியுள்ளார். விதவிதமான உடைகளை உடுத்தி தனது இன்ஸ்டாகிராமில் புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார்.
இந்நிலையில், உள்ளாடை எதுவும் அணியாமல் சட்டை மட்டும் அணிந்து படு கவர்ச்சியாக போஸ் கொடுத்து புகைப்படத்தை பகிர்ந்து ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்துள்ளார்.
தமிழ் திரையுலகில்…
ஒரு நடிகர்…
நடிகர் ஜீவா…
இந்த பொங்கல்…
முருங்கைக்காய் என்றாலே…