நீ செம கூல் மச்சி!.. வனிதா புகாருக்கு ரம்யா கிருஷ்ணன் ரியாக்‌ஷன் இதுதானாம்!..

Published on: July 4, 2021
---Advertisement---

08f264cc31935ee441ac3c1057f516df

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பல நிகழ்ச்சிகளில் வனிதா விஜயகுமார் தொடர்ச்சியாக கலந்து கொண்டு வருகிறார்.. குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் நடுவர்களில் ஒருவராக இருந்து வருகிறார். அதன்பின் ‘பிக்பாஸ் ஜோடிகள்’ நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார்.

92880a357e7cd1921467eae5acaee4f5

ஆனால், பிக்பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியிலிருந்து விலகுவதாக திடீரென அவர் அறிவித்தார்.. ஒரு சீனியர் பெண்மனி தன்னை அவமானப்படுத்துவதாக அவர் கூறியிருந்தார்.  கணவர், குடும்பம் என அந்த ஆதரவும் இல்லாமல் வாழ்க்கையில் வெற்றி பெறுவது சில பெண்களுக்கு பிடிக்கவில்லை என அவர் காரணம் கூறியிருந்தார். 

7b848fd02905b537d8051dabc4e98c41

தற்போது வனிதா விஜயகுமார் கூறும் அந்த பெண்மணி ‘பிக்பாஸ் ஜோடிகள்’ நிகழ்ச்சிக்கு நடுவராக இருக்கும் நடிகை ரம்யா கிருஷ்ணன் என்பது தெரியவந்துள்ளது. அதாவது, வனிதாவின் நடிப்புக்கு மிகவும் குறைவான மதிப்பெண்ணை ரம்யா கிருஷ்ணன் கொடுத்தார் எனவும், 10க்கு வெறும் ஒரு மதிப்பெண்ணை மட்டுமே கொடுத்ததால் கடுப்பான வனிதா இந்நிகழ்ச்சியிலிருந்து வெளியேற முடிவெடுத்ததாகவும் கூறப்படுகிறது.

aa357618ea8e86545183ee0a4cd9a294

இதுபற்றி ஒரு தொலைக்காட்சிக்கு பதில் கூறிய ரம்யா கிருஷ்ணன் ‘அந்த நிகழ்ச்சியின் போது என்ன நடந்தது என்பதை வனிதாவிடம்தான் நீங்கள் கேட்கவேண்டும். இது எனக்கு பெரிய பிரச்சனை கிடையாது. இதில் நான் கூற எதுவுமில்லை. பதில் கூறவும் நான் விரும்பவில்லை’ என கூலாக பதில் கூறியுள்ளார். 
 

Leave a Comment