
அந்த திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. அதன்பின் ராஷ்மிகா தெலுங்கில் முன்னனி நடிகையாக மாறினார். சமீபத்தில், மகேஷ் பாபுவிற்கு ஜோடியாக அவர் நடித்திருந்த ‘சரிலேரு நீக்கெவரு’திரைப்படம் வசூலை வாரிக்குவித்து வருகிறது. அதைத்தொடர்ந்து அதிக சம்பளம் வாங்கும் நடிகை பட்டியலுக்கு ராஷ்மிகா முன்னேறினார்.
இந்நிலையில், கர்நாடகா குடகு மாவட்டத்தில் உள்ள ராஷ்மிகாவின் வீட்டில் கடந்த 16ம் தேதி காலை 10க்கும் மேற்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவர் வீட்டில் இல்லை. அவரின் தந்தையிடம் விசாரனை நடத்தினர். அதன்பின் ராஷ்மிகாவிற்கு சொந்தமான திருமண மண்டபம் மற்றும் பெட்ரோல் பங்குகளில் சோதனை நடத்தினர்.
அதில், கணக்கில் காட்டப்படாத ரூ.25 லட்சம் ரொக்கப்பணம் கைப்பற்றப்பட்டிருப்பதாகவும், அதை சட்டப்படி ராஷ்மிகா எதிர்கொள்வார் எனவும் அவரின் தரப்பில் இருந்து கூறப்பட்டுள்ளதாக தற்போது செய்திகள் கசிந்துள்ளது.