Connect with us

Cinema News

எனக்கு சாப்பாட்டை விட பெட்ரூம் மேட்டர்தான் முக்கியம்!. சமந்தா சொன்ன வைரல் வீடியோ!..

சென்னையை சேர்ந்த சமந்தா தமிழ், தெலுங்கு என இரண்டு சினிமா உலகிலும் முக்கிய இடத்தை பிடித்தவர். தமிழை விட தெலுங்கில் அதிக படங்களில் நடித்திருக்கிறார். விஜயுடன் தெறி, மெர்சல் ஆகிய படங்களில் நடித்திருக்கிறார். நம்பர் ஒன் நடிகை இல்லை என்றாலும் இவருக்குனெ ஒரு மவுசு இருக்கிறது.

தெலுங்கு படங்களில் நடித்தபோது நாகார்ஜுனாவின் மகன் நாக சைத்தன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். சில வருடங்கள் கணவன் – மனைவியாக வாழ்ந்த இருவரும் ஒரு கட்டத்தில் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்துவிட்டனர். இவரின் விவாகரத்து சமூகவலைத்தளங்களிலும் அதிகம் விவாதிக்கப்பட்டது.

கணவரை பிரிந்தபின் சினிமாவில் நடிப்பதில் மட்டும் கவனம் செலுத்தி வருகிறார். சில ஹிந்தி வெப் சீரியஸ்களிலும் நடித்தார். அதில் சில படுக்கையறை காட்சிகளும் இடம் பெற்றிருந்தது. இதில், சர்ச்சையில் சிக்கினாலும் அதற்கெல்லாம் சமந்தா பதில் சொல்லவில்லை. ஒருபக்கம் தோல் நோயாலும் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

நடிகைகளில் சிலர் பேட்டி எடுக்கும்போது மிகவும் கவனமாக யோசித்து பதில் சொல்வார்கள். ஆனால், சமந்தா அப்படி இல்லை. மனதில் பட்டதை யோசிக்காமல் பேசிவிடுவார். ஒருமுறை உணவு, உடலுறவு இந்த இரண்டில் எதை நீங்கள் தேர்ந்தெடுப்பீர்கள்? என்கிற கேள்வி அவரிடம் கேட்கப்பட்டது.

அதற்கு பதில் சொன்ன சமந்தா ‘உணவு தேவைக்கு மட்டுமே. ஆனால், உடலுறவு மகிழ்ச்சி சம்பந்தப்பட்டது. எனவே, நான் உடலுறவுக்காக பட்டினி கிடப்பேன்’ என் ஓப்பனாக சொல்லி இருந்தார். இது சொல்லி பல வருடங்கள் ஆகிவிட்டது. ஆனால், இப்போது இந்த வீடியோ வைரலானது.

சமீபத்தில் தனது சிகிச்சைக்கு பயன்படுத்தப்பட்ட ஒரு மருந்து பற்றி சமந்தா பேச அது சர்ச்சையானது. சில மருத்துவர்கள் கூட அவருக்கு எதிர்ப்பு தெரிவித்திருந்த நிலையில்தான் இப்போது இந்த வீடியோ வைரலாகி வருகிறது.

https://x.com/BoAnalyst/status/1809576908071350430?t=CntbXmX6cdSuuXcpzglsUw&s=08

google news
Continue Reading

More in Cinema News

To Top