சினிமாவிலிருந்து விலகுகிறேன் - நடிகை சானா கான் அறிவிப்பு

by adminram |

5dba0483297094316582435be10aecb5

தமிழில் சிலம்பாட்டம், தம்பிக்கு எந்த ஊரு, பயணம், தலைவன் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்தவர் நடிகை சானா கான். தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, ஹிந்தி என பல மொழிகளிலும் நடித்துள்ளார்.

இந்நிலையில், தற்போது சினிமாவிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். எனக்கு புகழ், மரியாதை,பணம் எல்லாம் சினிமாத்துறை மூலம் கிடைத்தது. அதற்காக ரசிகர்களுக்கு நன்றி கடன் பட்டுள்ளேன். என்னை படைத்தவரின் ஆணைக்கு இணங்க இன்றிலிருந்து சமூக சேவையை துவங்கவுள்ளேன். சினிமா தொடர்பான என்னை யாரும் தொடர்பு கொள்ள வேண்டாம் என பதிவிட்டுள்ளார்.

Next Story