ஒரு முடிவோடுதான் இருக்கீங்க!.. கவர்ச்சி புகைப்படங்களால் கலங்கடிக்கும் சனம் ஷெட்டி...
பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தர்ஷன். இவரை சனம் ஷெட்டி காதலித்து வந்தார். பின்னர் இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடைபெற்றதாகவும், ஆனால் தர்ஷன் தன்னை ஏமாற்றிவிட்டதாகவும் கூறி காவல் நிலையத்தில் புகார் அளித்து பரபரப்பை ஏற்படுத்தினார். அதோடு, தற்போது நடைபெற்று வரும் பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார். அவர் நன்றாக விளையாடியும் அவர் பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டார். இது அவரின் ரசிகர்களுக்கு கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது.
தற்போது நிகழ்ச்சியிலிருந்து வெளியேறிவிட்ட சனம் ஷெட்டி தனது சமூக வலைத்தள பக்கங்களில் தொடர்ந்து தனது கவர்ச்சியான புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை அசரடித்து வருகிறார். சில சமயம் அவர் காட்டும் கவர்ச்சி எல்லை மீறியும் செல்கிறது.அதைக்கண்ட நெட்டிசன்கள் ‘உங்களுக்கு புடவைதான் அழகாக இருக்கிறது. இப்படி உடை அணியாதீர்கள்’ என அவருக்கு அறிவுரை கூறி வருகின்றனர். ஆனாலும், அவர் கவர்ச்சி காட்டுவதை நிறுத்தவில்லை.
இந்நிலையில், மீண்டும் சில கவர்ச்சி புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளார் சனம் ஷெட்டி.
Trying to be fashionaite ✨ pic.twitter.com/OrsaqIVNmj
— Sanam Shetty (@SanamShettyoff) December 26, 2020