More

கணவருக்கு ஒரு வாய்ப்புக் கொடுங்க… புரடியூசர்களை நச்சரிக்கும் நடிகை

90ஸ் கிட்ஸின் ஆதர்ஸ நாயகியாக வலம்வந்தவர் அவர். ஹோம்லி, கிளாமர் என எல்லா ஏரியாக்களிலும் வெளுத்து வாங்கியதால் அப்போதைய முன்னணி ஹீரோக்கள் எல்லோருடனும் நம்ம நடிகைக்கு வாய்ப்புகள் குவிந்தது. 

Advertising
Advertising

தொடர்ந்து பயங்கர பிஸியாக நடித்து பெரும் ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கியவர் அந்த நடிகை. கரியரின் உச்சத்தில் இருந்தபோதே சக நடிகரைக் காதலித்துத் திருமணம் செய்துகொண்டார். அதன்பிறகு குழந்தை, குடும்பம் என நடிப்பிலிருந்து ஒதுங்கியிருந்தவர், ஒரு இடைவெளிக்குப் பின்னர் சின்னத்திரைப் பக்கம் செட்டிலானார். 

அதன்பின்னர், சில படங்களிலும் தலைகாட்டிய அவருக்கு வாய்ப்புக் கொடுக்கத் தயாரிப்பாளர்களும் இயக்குனர்களும் தயாராக இருக்கிறார்களா. அம்மணிக்குத் தொடர்ச்சியாக வாய்ப்புகள் குவிந்து வரும் நிலையில், பட விழாக்கள், நிகழ்ச்சிகளுக்குச் செல்லும் இடங்களில் கணவருக்கு வாய்ப்புக் கேட்டு புரடியூசர்களை நச்சரித்து வருகிறாராம். இதனால், பல தயாரிப்பாளர்கள் அம்மணி இருக்கும் திசைப் பக்கமே வருவதில்லையாம்.  

Published by
adminram

Recent Posts