எங்கிருந்து வந்துச்சுன்னே தெரியல!... நடிகை ஷெரின் போட்ட அதிர்ச்சி பதிவு.....

by adminram |

a733ba4c64c6b512f040452f02343ea3

தனுஷ் அறிமுகமான ‘துள்ளுவதோ இளமை படத்தில் அறிமுகம் ஆனவர் ஷெரின். முதல் படமே சூப்பர்ஹிட் ஆனது. ஆனாலும் ஷெரினுக்கு பெரிய வாய்ப்புகள் எதுவும் வரவில்லை. தொடர்ந்து விசில், உற்சாகம் என சில படங்களில் நடித்தார். இதில் விஷம் படம் மட்டும் ஹிட் ஆனது. அதன்பின் திரையுலகில் காணாமல் போனார்.

177deb8295dbfe09f98ede5af391c38d

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள அவருக்கு வாய்ப்பு கிடைத்தது. ஆனால் அவரை பார்த்த ரசிகர்கள் ஷாக் ஆகினர். காரணம் உடல் குண்டாகி ஆண்டி போல இருந்தார். அந்நிகழ்ச்சிக்கு பின் உடற்பயிற்சி மூலம் உடல் எடையை குறைத்து மீண்டும் பழைய அழகுக்கு திரும்பினார்.

1acf7bba56965ff71cf1a08b9f58feae

அவ்வப்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது அழகான புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

இந்நிலையில், தற்போது அவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். இந்த தகவலே அவரே தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். எனக்கு கொரோனா பாசிட்டிவ் என வந்துள்ளது. கடந்த 3-4 நாட்களாக என்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் உடனடியாக தங்களை தனிமைப்படுத்திக்கொள்ளுங்கள்’ என பதிவிட்டுள்ளார். மேலும், வீடியோ மூலமாகவும் இதை தெரிவித்துள்ளார்.

113df51a16d13e255e6d8868a033d4e8

ஷெரின் கடந்த மே மாதம் இவர் தடுப்பூசி போட்டுக்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story