More

நடிகை பாபிலோனாவின் அத்தை மகனுக்குக் கத்திக் குத்து – அதிர்ச்சியளிக்கும் பின்னணி!

நடிகை மாயாவின் மகனும் பாபிலோனாவின் அத்தை மகனுமாகிய விக்கியை சிலர் கத்தியால் குத்திவிட்டு தப்பித்து சென்றுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertising
Advertising

தமிழ் திரைப்படங்களில் கவர்ச்சி நடிகையாக வலம் வந்தவர் நடிகையாகவும் வில்லியாகவும் நடித்து புகழ்பெற்றவர் மாயா. இவர் நடிகை பாபிலோனாவின் அத்தை . மாயாவுக்கு விக்கி என்ற மகனும் உள்ளார். இந்நிலையில் விக்கியை சென்னை வளசரவாக்கத்தில் உள்ள அவரது வீட்டில் சில மர்ம நபர்கள் கத்தியால் குத்திவிட்டு தப்பி ஓடியுள்ளனர்.

இந்த தாக்குதலில் நெஞ்சுப் பகுதியில் விக்கி

 காயம் அடைந்ததை அடுத்து அவர் சென்னை வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறார். தற்போது அவர் அபாய கட்டத்தை தாண்டிவிட்டதாக கூறப்படுகிறது. தாக்குதலுக்கான பின்னணி பற்றி விசாரிக்கையில் விக்கிக்கு போதைப் பழக்கம் இருந்ததாகவும், அது சம்மந்தமான முன்விரோதத்தால் இது நடந்து இருக்கலாம் என சொல்லப்படுகிறது. இதையடுத்து வழக்குப் பதிவு செய்த போலிஸார் இப்போது குற்றவாளிகளைத் தேடி வருகின்றனர்.

Published by
adminram

Recent Posts