என்னது... சிலுக்கே சாப்பாடு ஊட்டி விட்டாரா? கொடுத்து வச்ச அந்த நடிகர் யாருன்னு தெரியுமா?

by ராம் சுதன் |

நடிகர் ரவிகாந்த் பாலசந்தரின் மனதில் உறுதி வேண்டும் படத்தில் அறிமுகமானார். இவர் தனது திரையுல வாழ்வில் நடிகை சில்க் ஸ்மிதா உடனான தனது அனுபவங்களை யூடியூப் சேனல் ஒன்றில் இவ்வாறு பகிர்ந்துள்ளார். என்னோட ரொம்ப குளோசஸ் யாருன்னா சில்க் ஸ்மிதா, ஊர்வசி, அர்ச்சனா. மற்றவங்க கூட ஒர்க் பண்ணியிருக்கேன். கலாட்டா பண்ணுவோம். ஆனா இந்த 3 பேரு மட்டும் தான் எதுவா இருந்தாலும் என்னைக் கேட்காம எதுவுமே பண்ண மாட்டாங்க.

அம்மா கிரியேஷன் சிவா வந்து ஈரோட்டுல ஒரு கச்சேரி பண்ணினாரு. அப்போ பிரபுதேவா, கிங்காங், நானு, அமர் எல்லாம் போறோம். அது அமர் கச்சேரி. சில்க் ஸ்மிதா எங்க கூட வர்றாங்க. ஈவ்னிங் தான் கச்சேரி. சில்க் பேரு விஜயலட்சுமி.

நான் அமர் கிட்ட கேட்டேன். எல்லாருக்கும் புரோக்கிராம் இருக்கு. எனக்கு ஒண்ணுமே இல்லையேன்னு. ரவி கிட்ட போ. அவரு எதாவது எழுதிக் கொடுப்பாருன்னு சொன்னார். நானும் சில்க்கும் பேசிக்கிட்டு இருக்கோம். கச்சேரில கண்மணி அன்போடு காதலன், சொன்னபடி கேளு, இஞ்சி இடுப்பழகா, சுந்தரி நீயும்னு எல்லாப் பாடல்களையும் நான் பாடினேன்.

எனக்கு கமல் வாய்ஸ் வந்தது. ஒரே ஒரு பாடல் கமல் பாடியதை பாட முடியாதுன்னா அது போட்டு வைத்த காதல் திட்டம் பாடல் தான். அதை நானும் மனோவும் சேர்ந்து தான் பாடுவோம். மனோ ஃபுல் ரேஞ்ச்ல போவார். கமல் வாய்ஸ் நல்லா செட்டாகும். அப்போ மொபைல் போன் வந்த டைம். 3 நாள் கழிச்சி சில்க் எனக்கு போன் பண்ணினா. வீட்டுக்கு வர முடியுமான்னு கேட்டாங்க.

எனக்கு தெலுங்கு சங்கம் அமெரிக்காவுல கூப்பிட்டுருக்காங்க. என்னோடு வர முடியுமா?'ன்னு கேட்டாங்க. எனக்கு தெலுங்கு தெரியாதுன்னு சொன்னேன். நீங்க தமிழ்ல சொல்லுங்க. நான் தெலுங்குல எழுதிக்கறேன்னாங்க. 45 நாள் நாங்க அங்க இருந்தோம். 3 நாள் அவங்களுக்காக சப்ஜெக்ட்டை ரெடி பண்ணிக் கொடுத்துட்டேன். நாளைக்கு நைட் டின்னர் இங்க தான்.

6 மணிக்கு ரிகர்சல் வந்துட்டு சாப்பிட்டுட்டு கிளம்பிருன்னு சொன்னார். நான் லெப்ட்ல இருக்கேன். அவ ரைட்ல இருக்கா. அவ சாப்பாட்டை மிக்ஸ் பண்ணிக்கிட்டு இருக்கா. 'என்ன டின்னருக்குக் கூப்பிட்டுட்டு நீ மட்டும் சாப்பிற?'ன்னு கேட்டேன். அப்ப தான் அவ எனக்கு ஊட்டி விடுறா. அப்படின்னதும் ரொம்ப குளோஸ் ஆனாள். கிட்டத்தட்ட லவ் மாதிரி ஆகிடுச்சு. நான் ரொம்ப அட்வைஸ் பண்ணினேன். 'நான் சீரியஸா பேசிக்கிட்டு இருக்கேன். நீ ஜோக் அடிக்கிறீயா'ன்னு கேட்பாள்.

சரி நாளைக்குப் பார்த்துக்கலாம்னு வந்துட்டேன். மறுநாள் பேப்பரைப் பார்த்தா எப்படி இருக்கும்? நான் அவளை ரொம்ப மிஸ் பண்றேன். நான் அமரனுக்குப் போன் பண்ணினேன். நீ போகாதே. நேத்து அங்க தான இருந்தே. தேவை இல்லாத கேள்வி வரும்னு சொல்லிட்டார். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

நடிகர் ரவிகாந்த் சுயம்வரம், ஆஞ்சநேயா, கோவா, சரோஜா, மங்காத்தா, பிரியாணி, மாநாடு ஆகிய படங்களிலும் நடித்துள்ளார். இவர் நடிகை அம்பிகாவை திருமணம் செய்தார். அதன்பிறகு விவாகரத்து ஆனது குறிப்பிடத்தக்கது.

Next Story