நடிகை சினேகா வீட்டில் மீண்டும் மழலைச் சத்தம் ! கணவர் மகிழ்ச்சி !

நடிகை சினேகாவுக்கு இரண்டாவதாக பெண் குழந்தை இன்று பிறந்துள்ளது.

நடிகை சினேகா தமிழ் சினிமாவில் புன்னைகை அரசியாக வலம் வந்து கொண்டிருந்தார். அதற்கடுத்து தன் சக நடிகரான பிரசன்னாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஏற்கனவே ஒரு ஆண் குழந்தை பிறந்திருந்த நிலையில் இரண்டாவது முறையாக சினேகா கர்ப்பமானார்.

இதையடுத்து இன்று சினேகாவுக்கு இரண்டாவதாக குழந்தை பிறந்துள்ளது. பிரசவத்துக்குப் பிறகு குழந்தையும் சினேகாவும் நலமாக இருப்பதாக பிரசன்னா தெரிவித்துள்ளார். மேலும் தன்னுடைய டிவிட்டரில் ‘தைமகள் வந்தாள்’ என்று அறிவித்துள்ளார்.

Published by
adminram