துள்ளுவதோ இளமை திரைப்படம் மூலம் சினிமாவில் நடிக்க தொடங்கி ஒரு கட்டத்தில் ஹீரோவாக சில படங்களை நடித்து அதன்பின் கௌரவ வேடங்களில் நடித்தவர்தான் அபினய். இவரின் அம்மா டி.ஆர்.ராதா மணி மலையாளத்தில் பல படங்களிலும் நடித்த பிரபலமானவர்.தமிழில் கிடைத்த வாய்ப்புகளில் நடித்து வந்த அபிநய்க்கு குடிப்பழக்கம் இருந்தது.
சினிமாவில் சரியான வாய்ப்புகள் இல்லாததால் குடிப்பழக்கம் அதிகமாகி ஒரு கட்டத்தில் உடல்நிலை மோசமடைந்தது. நடிகர் தனுஷ், KPY பாலா போன்ற சிலர் அவருக்கு பண உதவியும் செய்தார்கள். ஆனால், சிகிச்சை பலனின்றி சில நாட்களுக்கு முன்பு அவர் மரணம்டைந்தார். அவரின் இறுதிச் செலவுகளை KPY பாலாவே ஏற்றுக்கொண்டார்.
இந்நிலையில்தான் துணை நடிகை ஸ்ரீ அஸ்வினி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அபிநய் பற்றி ஒரு உருக்கமான பதிவை இட்டிருக்கிறார்.
உருகி உருகி காதலித்தான்.. அவன் காதலை நிராகரித்தேன்.. நான் பயப்படுகிறேன் என நினைத்து அவன் அம்மாவை அழைத்து வந்தான்.. உண்மையில் அப்போதுதான் பயம் அதிகரித்தது.. பல நிகழ்ச்சிகளில் ஒன்றாக கலந்துகொண்டோம்.. ஆனால் அவன் மீது காதல் வரவில்லை.. பயம்தான் வந்தது.. அதற்கு காரணம் அவன் அழகு.. ‘இவ்வளவு அழகாக இருப்பவன் என்னை ஏன் காதலிக்க வேண்டும்?’ என்று என் மீதிருந்த தாழ்வு மனப்பான்மை.. ‘காதல் வேண்டாம்.. நட்பே போதும் என்றேன்’.. அவன் கேட்கவிலலி.. குடிப்பழக்கத்தை விடும்படி எவ்வளவோ சொன்னேன்.. அவன் கேட்கவில்லை.
‘உன்னை திருமணம் செய்தால் அவன் திருந்திவிடுவான்.. நான் இருக்கிறேன்’.. என அவரின் அம்மா சொன்னார். குடியை விட்டும்படி அவனிடம் கெஞ்சினார். மறுத்தான்.. காதலா? மதுவா? என்ற போராட்டத்தில் மதுவை மட்டும் பற்றி கொண்டான்.. நான் செத்தா கூட என் முகத்தில் முழிக்காதே.. நீ செத்தாலும் நானும் வரமாட்டேன் என சொல்லி சண்டையிட்டு பிரிந்தோம்..
அவனின் அம்மா எவ்வளவோ சொல்லியும் அவனை ஏற்க என் மனம் இடம் தரவில்லை.. ஒரு கட்டத்தில் அழைத்தான்.. அம்மாவும் போய்விட்டார்… நீ சொன்னதை கேட்காமல் இன்று உன் நினைவுகளோடு தவிக்கிறேன்.. வருகிறாயா எனக்கேட்டான். ‘மதுவை நாடி என் மனதை நோகடித்தாய் மன்னித்து விடு எனக்கு திருமணமாகி விட்டது’ என்றேன்..
ஒருநாள் அழைத்து ‘நீ சொன்னது போலவே குடிநோயாளி ஆகிவிட்டேன்.. என் நிழலை கூட நீ பார்க்காதே.. கவலையும் படாதே.. இது எனக்கு ஒரு பாடம்.. குடியோடு வாழ்பவர்களுக்கு என் சாவு ஒரு பாடமாக இருக்கும்’ என்றான்.. அன்று வராத காதல் இப்போது அவன் மீது வந்திருக்க அவனோ காற்றோடு கலந்துவிட்டான்’ என உருகியிருக்கிறார்.
பொதுவாக பொங்கல்,…
இறுதிச்சுற்று சூரரைப்போற்று…
தமிழ் சினிமாவில்…
சமீபகாலமாகவே தமிழில்…
ரஜினியின் 173-வது…