படு குண்டாகி அடையாளம் தெரியாமல் ஆளே மாறிப்போன நடிகை... அதிர்ச்சியில் உறைந்து போன ரசிகர்கள்....
80களில் முன்னணி ஹீரோவாக வலம் வந்தவர் நடிகை ராதா. கமல், ரஜினி, விஜயகாந்த், பிரபு, சத்தியராஜ் என அப்போதைய முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்தவர்.இவருக்கு ஒரு மகன் மற்றும் 2 மகள்கள். மூத்த மகள் கார்த்திகா. இவர் ஜீவா நடித்த ‘கோ’ திரைப்படத்தில் அறிமுகமானார். அதன்பின் பாரதிராஜா இயக்கத்தில் 'அன்னக்கொடியும் கொடிவீரனும்’ என்கிற படத்தில் நடித்தார். தெலுங்கில் சில படங்களில் நடித்தார். அதன்பின் அவர் திரைப்படங்களில் நடிப்பதில்லை.
அதேபோல், இவரின் இளைய மகள் துளசி நாயர். இவர் மணிரத்னம் இயக்கிய ‘கடல்’ திரைப்படதில் கதாநாயகியாக அறிமுகமானார். அதன்பின் ஜீவாவுடன் ‘யான்’ என்கிற படத்தில் நடித்தார். அதன் பின் அவரும் சினிமாவில் நடிக்கவில்லை. அப்படம் 2014ம் ஆண்டு வெளியானது.
அப்படம் வெளியாகி 7 வருடங்கள் ஆகிவிட்ட நிலையில் ஒரு வீடியோ வெளியாகி ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது. ரதாவின் மூத்த மகன் விக்னேஷின் பிறந்தநாளை அவர்கள் குடும்பத்துடன் ஒரு உணவகத்தில் கொண்டாடினர். இந்த வீடியோவை ராதா தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில், துளசி நாயரின் குண்டு உருவம்தான் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது. ஏனெனில், அம்மாவை போலவே வெயிட் போட்டு அடையாளம் தெரியாத அளவுக்கு அவர் மாறியுள்ளார்.
இதில், துளசியின் உருவத்தை பார்த்த நெட்டிசன்கள் ‘எப்படி இருந்த பொண்ணு இப்படி ஆகிப்போச்சே! என பதிவிட்டு வருகின்றனர்.
♥️ Vignesh is a Good Son super Brother awesome Cousin Adi dool Friend pic.twitter.com/qBkkuQ73KM
— Radha Nair (@ActressRadha) August 17, 2021