ஃபீல் பண்ணாத டார்லிங்… இவங்க எப்பவும் இப்படித்தான்! – யாஷிகாவுக்கு வனிதா விஜயகுமார் ஆறுதல்…

d46b3205a6e8ee9cceffa4c4c09d3c2a-1

இருட்டு அறையில் முரட்டுக்குத்து, நோட்டா, ஜாம்பி உள்ளிட்ட சில திரைப்படங்களில் நடித்தவரும், பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவருமான நடிகை யாஷிகா ஆனந்த் சமீபத்தில் கார் விபத்தில் சிக்கியது எல்லோருக்கும் தெரியும். அந்த விபத்தில் அவருடன் பயணம் செய்த அவரது தோழி பவானி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். யாஷிகாவுக்கு இடுப்பெலும்பில் முறிவுகள் மற்றும் வலது காலில் முறிவு ஏற்பட்டது.

படுகாயங்களுடன் அனுமதிக்கப்பட்ட  அவருக்கு சில அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டது. யாஷிகா தற்போது உடல் நலம் தேறி வருகிறார். விபத்து நடந்த போது யாஷிகாவும், அவரின் நண்பர்களும் மது அருந்தியிருந்ததாக பலரும் கூறி வருகின்றனர். 

beabe8aa3fc680ddb39927c0b172dbc3

ஆனால், இந்த தகவலை யாஷிகா மறுத்துள்ளார். நாங்கள் குடித்திருக்கவில்லை. போலீசாரும், டாக்டருமே இதை உறுதி செய்துள்ளனர். ஆனால், பொய்யான தகவலை சில ஊடகங்கள் பரப்பி வருகின்றனர். கொஞ்சம் மனித நேயத்துடன் நடந்து கொள்ளுங்கள். வாசகர்களை கவர்வதற்காக இந்த பொய்யான ஊடகங்கள் பொய் தகவலை பரப்பி வருகின்றனர். நீங்கள் வெட்கப்பட வேண்டும். 2 வருடங்களுக்கு முன்பு என்னை பற்றி பொய்யான தகவலை பரப்பியதற்காக அவதூறு வழக்கு தொடர்ந்தேன். ஆனால், இவர்கள் வதந்திக்காக எந்த எல்லைக்கும் செல்வார்கள் என காட்டமாக இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.

இந்நிலையில், அவரின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கமெண்ட் செய்துள்ள வனிதா விஜயகுமார் ‘டார்லிங். இது யாருக்கு வேண்டுமானாலும் நடக்கும். அதனால்தான் அதன் பெயர் விபத்து. பிறப்பும், இறப்பும் நம் கையில் இல்லை. யாரும் அதை மாற்ற முடியாது. உன் மீதே தவறு இருந்தாலும் கூட உன்னை மீறி நடந்த ஒரு சம்பவத்திற்காக நீ உன்னையே குறை கூறிக்கொள்ளாதே. மற்றவர்கள் என்னை நினைக்கிறார்கள் என்பது பற்றி கவலைப்படாதே. தெளிவாக இரு. உன் ஆரோக்கியத்தை பார்த்துக்கொள். ஒரு காரணத்திற்காகத்தான் நீ இதிலிருந்து மீண்டிருக்கிறாய். கடவுள் உன்னை ஆசிர்வதிப்பார்’ என அவர் யாஷிகாவுக்கு ஆறுதல் கூறியுள்ளார்.

Categories Uncategorized

Leave a Comment