அடுத்த சூப்பர்ஸ்டார் பிரசாந்த் தானாம்... அப்படின்னா அஜீத், சூர்யாலாம் கியூல தான் நிக்கணுமா?
விஜய் தற்போது தமிழ்சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக உள்ளார். சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் இன்னும் பீல்டில் இருக்கும்போதே அடுத்த சூப்பர்ஸ்டார் நாற்காலிக்கு கடும் போட்டி நிலவுகிறது. விஜயைச் சொன்னார்கள்.
இப்போது அவர் சினிமாவுக்கு முழுக்கு போட்டு விட்டு முழுநேர அரசியலில் இறங்கப் போகிறார். அடுத்த சூப்பர்ஸ்டார் கியூவில் அஜீத், சூர்யா நிற்கின்றனர். ஆனால் வனிதா விஜயகுமார் திடுதிப்புன்னு அடுத்த சூப்பர்ஸ்டார் பிரசாந்த் தான் என்று சொல்லி விட்டார். அதெப்படி சொன்னாருன்னு பார்க்கலாமா...
90ஸ்ல ஸ்கூல் டைம்ல தான் நான் சினிமாவுக்கு வந்தேன். அந்த டீன் ஏஜ் கிரஷ்ல வந்து பிரசாந்த் தான் பெஸ்ட் ஹீரோ. இந்த சில வருடங்களில் பிரசாந்துடனான அழகான நட்பு எனக்கு கிடைத்தது நல்ல விஷயம். அவர் எல்லா விஷயத்தையும் அப்பாவிடம் இருந்தே கற்றுக் கொள்கிறார். அந்தகன் படத்துல எதையுமே குறை சொல்ல முடியாது. இதை புரொமோட் பண்ண வேண்டிய அவசியமே இல்ல. இது தானா ரீச் ஆயிடும்.
நான் அந்தாதூண் படத்தையும் பார்த்தேன். ஆனா இங்கு தியாகராஜன் அங்கிள் அருமையா பண்ணிருக்காரு. எனக்கு முதல்ல பிரசாந்த் படம். அங்;கிள் பண்றாருன்னு தெரியாது. ஏதோ ரீமேக்னு சொன்னாங்க. நான் படம் பார்க்கல. அதுக்கு அப்புறம் நான் புக் ஆயிட்டேன்.
நான் கவலையேப் படமா கேரக்டர் நல்லா இருந்தா போதும்னு ஒத்துக்கிட்டேன். டப்பிங் போகும்போது எனக்கு டபுள் பேமெண்ட் கொடுத்தாங்க. நான் ஒரு டிராவல்ல போன் தொலைச்சிட்டேன். அப்போ கரெக்டா அங்கிள் எனக்குக் கிடைச்சாரு.
'நானே போன் தொலைஞ்சிட்டுன்னு டென்சன்ல இருக்கேன்'னு சொன்னேன். 'நீ எங்கே இருக்க'ன்னு கேட்டாரு. அவ்வளவு தான். அடுத்த நிமிஷமே அவரு போன் வாங்கிக் கொடுத்தாரு.
நான் பிரபுதேவா கூட நடிக்கணும்னு ஆசைப்பட்டேன். காதலன் படத்தைப் பார்த்ததும் அந்த ஆசை வந்தது. அப்படி நடிச்சது தான் சந்திரலேகா. கடைசி நேரத்துல அதுல விஜய் வந்துட்டாரு. அப்போ நான் விஜய்க்கிட்ட 'நீங்க தான் நெக்ஸ்ட் சூப்பர்ஸ்டார்னு சொன்னேன்'. இப்போ அவரு அரசியல் போகப்போறாரு. வாழ்க்கைங்கறது வட்டம். இப்போ அடுத்த சூப்பர்ஸ்டார் பிரசாந்த் தான். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
தியாகராஜன் தயாரித்து இயக்கும் படம். சந்தோஷ் நாராயணன் இசை அமைத்துள்ளார். பிரசாந்தின் நடிப்பில் உருவான இந்தப் படம் நீண்ட நாளாக கிடப்பில் போடப்பட்டு தற்போது ரிலீஸ் ஆக உள்ளது. ஆக.22ல் உலகெங்கும் உள்ள திரையரங்குகளில் வெளியாகிறது.