Categories: latest news

அடுத்த சூப்பர்ஸ்டார் பிரசாந்த் தானாம்… அப்படின்னா அஜீத், சூர்யாலாம் கியூல தான் நிக்கணுமா?

விஜய் தற்போது தமிழ்சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக உள்ளார். சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் இன்னும் பீல்டில் இருக்கும்போதே அடுத்த சூப்பர்ஸ்டார் நாற்காலிக்கு கடும் போட்டி நிலவுகிறது. விஜயைச் சொன்னார்கள்.

இப்போது அவர் சினிமாவுக்கு முழுக்கு போட்டு விட்டு முழுநேர அரசியலில் இறங்கப் போகிறார். அடுத்த சூப்பர்ஸ்டார் கியூவில் அஜீத், சூர்யா நிற்கின்றனர். ஆனால் வனிதா விஜயகுமார் திடுதிப்புன்னு அடுத்த சூப்பர்ஸ்டார் பிரசாந்த் தான் என்று சொல்லி விட்டார். அதெப்படி சொன்னாருன்னு பார்க்கலாமா…

90ஸ்ல ஸ்கூல் டைம்ல தான் நான் சினிமாவுக்கு வந்தேன். அந்த டீன் ஏஜ் கிரஷ்ல வந்து பிரசாந்த் தான் பெஸ்ட் ஹீரோ. இந்த சில வருடங்களில் பிரசாந்துடனான அழகான நட்பு எனக்கு கிடைத்தது நல்ல விஷயம். அவர் எல்லா விஷயத்தையும் அப்பாவிடம் இருந்தே கற்றுக் கொள்கிறார். அந்தகன் படத்துல எதையுமே குறை சொல்ல முடியாது. இதை புரொமோட் பண்ண வேண்டிய அவசியமே இல்ல. இது தானா ரீச் ஆயிடும்.

நான் அந்தாதூண் படத்தையும் பார்த்தேன். ஆனா இங்கு தியாகராஜன் அங்கிள் அருமையா பண்ணிருக்காரு. எனக்கு முதல்ல பிரசாந்த் படம். அங்;கிள் பண்றாருன்னு தெரியாது. ஏதோ ரீமேக்னு சொன்னாங்க. நான் படம் பார்க்கல. அதுக்கு அப்புறம் நான் புக் ஆயிட்டேன்.

நான் கவலையேப் படமா கேரக்டர் நல்லா இருந்தா போதும்னு ஒத்துக்கிட்டேன். டப்பிங் போகும்போது எனக்கு டபுள் பேமெண்ட் கொடுத்தாங்க. நான் ஒரு டிராவல்ல போன் தொலைச்சிட்டேன். அப்போ கரெக்டா அங்கிள் எனக்குக் கிடைச்சாரு.

‘நானே போன் தொலைஞ்சிட்டுன்னு டென்சன்ல இருக்கேன்’னு சொன்னேன். ‘நீ எங்கே இருக்க’ன்னு கேட்டாரு. அவ்வளவு தான். அடுத்த நிமிஷமே அவரு போன் வாங்கிக் கொடுத்தாரு.

நான் பிரபுதேவா கூட நடிக்கணும்னு ஆசைப்பட்டேன். காதலன் படத்தைப் பார்த்ததும் அந்த ஆசை வந்தது. அப்படி நடிச்சது தான் சந்திரலேகா. கடைசி நேரத்துல அதுல விஜய் வந்துட்டாரு. அப்போ நான் விஜய்க்கிட்ட ‘நீங்க தான் நெக்ஸ்ட் சூப்பர்ஸ்டார்னு சொன்னேன்’. இப்போ அவரு அரசியல் போகப்போறாரு. வாழ்க்கைங்கறது வட்டம். இப்போ அடுத்த சூப்பர்ஸ்டார் பிரசாந்த் தான். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

தியாகராஜன் தயாரித்து இயக்கும் படம். சந்தோஷ் நாராயணன் இசை அமைத்துள்ளார். பிரசாந்தின் நடிப்பில் உருவான இந்தப் படம் நீண்ட நாளாக கிடப்பில் போடப்பட்டு தற்போது ரிலீஸ் ஆக உள்ளது. ஆக.22ல் உலகெங்கும் உள்ள திரையரங்குகளில் வெளியாகிறது.

ராம் சுதன்

Recent Posts

கோபத்தில் விஜய் கன்னத்தில் அறைந்த எஸ்.ஏ.சி?!. பிரிவுக்கு இதுதான் காரணமா?..

இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகரின் ஒரே மகன் விஜய்.. ஆசை மகன்.. மகளும் சிறு வயதிலேயே நோய்வாய்ப்பட்டு இறந்து விட்டதால் மகன் விஜயை…

2 hours ago

kalidas 2 Review: காளிதாஸ் 2- திரைப்பட விமர்சனம்

பரத் நடிப்பில் கடந்த 2019ம் ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற காளிதாஸ் படத்தின் இரண்டாம் பாகம் இன்று வெளியாகிறது.…

3 hours ago

கௌசல்யாவைப் பார்த்து நானே ஜொள்ளு விட்டிருக்கேன்! – செல்வராகவன் கலகலப்பு!

தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குனர்களில் செல்வராகவனும் ஒருவர். அவரது 7ஜி ரெயின்போ காலனி,காதல் கொண்டேன் மற்றும் புதுபேட்டை ஆகிய படங்களை…

12 hours ago

மீண்டும் சீறும் தம்பி : கில்லி,படையப்பா வரிசையில் வசூலில் சாதனை படைக்குமா?

தமிழ் சினிமாவில் தற்போது ரீ-ரிலீஸ் ஃபீவர் உச்சத்தில் இருக்கிறது. பல உச்ச நடிகர்களின் படங்கள் ரீ ரிலீ ஸ் செய்யப்பட்டு…

14 hours ago

நாளை மோதும் 4 முக்கிய படங்கள்

தமிழ் சினிமா ரசிகர்களுக்கு வெள்ளிகிழமை என்றாலே படு கொண்டாட்டம் ஆகிவிடுவார்கள். காரணம் அப்போதிலிருந்தே வெள்ளிகிழமை அன்றுதான் புதிய படங்கள் வெளியாகும்.…

14 hours ago

குடைச்சல் கொடுக்கும் அனிருத்!.. சாய் அபயங்கரிடம் பலரும் போக இதுதான் காரணமா?…

கடந்த சில வருடங்களாகவே தமிழ் சினிமாவில் பெரிய நடிகரின் படங்களுக்கு அனிருத்தே இசையமைத்து வருகிறார். ஏ.ஆர் ரஹ்மானிடம் சென்றவர்கள் கூட…

15 hours ago